உங்களுக்குத் தெரியுமா?

பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால், அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்து மதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பெண்ணால் முடியும் – பேட்மிண்டனில் சாதனை புரியும் ஆராதயா

ஆறு வயது முதலே விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார் ஆராதயா. அய்ந்தாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறந்த வகையில் பேட்மிண்டன் விளையாடி வருகிறார். பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று, 40 கோப்பைகளை வென்றுள்ளார். இந்தியாவிற்காக சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும்; ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்; என்று கூறுகிறார் ஆராதயா. “என் அப்பா மருத்துவர் அவினாஷ். பெரும்பாக்கத்தில் உள்ள எங்கள் குடியிருப்பில் அப்பா தினமும் பேட்மிண்டன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (312) – கி.வீரமணி

திருச்சி – மாநில திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகக் களப்பணி பயிற்சி முகாம் 4.2.2003 செவ்வாய் முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கியது. ஒன்றிய நகரத் தலைவர், செயலாளர்கள், கோட்ட அமைப்பாளர்கள் அதில் பங்கேற்றனர். எமது தலைமையில் நடைபெற்ற முகாமில் கோட்ட அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிமுக உரையாற்றினார். இறுதியாக நான் உரையாற்றினேன். சேலத்தில் 5.2.2003 புதன் காலை 9:00 மணிக்கு சென்னை அய்.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம். இராமன் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

நீதித் துறையில் காவி கலப்பு! 1. கே: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் தாக்கப்படுவதாக பி.ஜே.பி. வதந்தி பரப்பி, முதல்வரின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை முறியடிக்க முயற்சிப்பதன் மூலம், காவிக்கூட்டம் வடமாநில உணர்வை, வரும் நாடாளுமன்றக் தேர்தலில் கையிலெடுக்கவிருப்பதால், முன்கூட்டியே வடமாநிலத் தலைவர்களுக்கு சரியான புரிதலை உருவாக்க வேண்டியது கட்டாயம் அல்லவா?                                   […]

மேலும்....

மரணத்திற்குப் பின்… பேய்? – மருத்துவம்

மருத்துவர் இரா. கவுதமன் மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் இருந்தது. மனிதனின் நாகரிகமோ, அறிவோ வளராதகாலத்தில் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் என்ற எண்ணமும் பல கற்பனைகளை மனித மனதில் தோற்றுவித்தது. அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அறிவியல் பொறிகள் மூலமும், மிக அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடையே வெகு எளிதாகப் பரப்பப்படுகின்றன. மரணத்திற்குக் […]

மேலும்....