அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (324)

‘நெய் மணக்கும் நெய்வேலித் தீர்மானம்’’ என்று கலைஞர் பாராட்டைப் பெற்ற பொதுக்குழுத் தீர்மானம்! … கி.வீரமணி … அமெரிக்க டாக்டர் சோம. இளங்கோவன் மாமனார் திருச்சி மேலகற்கண்டார் கோட்டை அரு.நீலமேகம் பல நாட்களாக உடல்நலிவுற்று திருச்சி சுந்தரம் தனியார் நர்சிங் மருத்துவமனையில் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து வல்லத்திற்கு மேலகற்கண்டார் கோட்டை சென்று, அன்னாருடைய உடலுக்கு மரியாதை செலுத்தினோம். அவருடைய துணைவியார் தங்கப்பொண்ணு அம்மையார், மகன்களான என். சுப்பிரமணியம், என். மோகன் […]

மேலும்....

சிறுகதை – திருச்செந்தூர் முருகன்

… ஏ.வி.பி. ஆசைத்தம்பி … திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் அன்று ஒரே கூட்டம். காரணம் திருச்செந்தூரில் விசாகமாம். முருகனைத் தரிசிக்கவே பக்தகோடிகள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். திருச்செந்தூர் செல்லுகிற இரயில்வண்டி இழுத்துவிடப்பட்டது. ஒருவரை ஒருவர் ஆண் பெண் வித்தியாசமின்றி அத்வைத வேத அடிப்படையில் இடித்துக்கொண்டு இரயிலில் ஏறினர். ‘ஏன்தான் இந்த அவசரமும் அவதியுமோ! நாளைக்குப் போனால் முருகன் இருக்க மாட்டாரா? அல்லது இரயில் போகாதா? இப்படித் துணிந்து எண்ணத் தூண்டும் அங்கிருந்த பரிதாப நிலை! ஒரு வண்டியில் நெருக்கடி […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர் – நம் கட்டளைகளை கேள்வி கேட்காது நிறைவேற்ற வேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

நமக்கு எப்போது வெளிப்படையாக ஆட்சி அதிகாரம் வருகிறதோ, அதன் அருள் உலகெங்கும் பரவ எப்போது நேரம் வாய்க்கிறதோ, அப்போது நாம் சட்டங்களை எல்லாம் மாற்றியமைப்போம். நாம் வகுக்கும் சட்டங்கள் யாவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், நிலையானதாகவும், எவ்வித வியாக்கியானத்துக்கும் இடம் இல்லாததாகவும் இருக்கும். இதனால் அந்தச் சட்டங்களை யாரும் தெளிவாக, எளிதாக அறிய முடியும். இதில் முக்கிய அம்சமானது, அதிகாரத்தில் உள்ளவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது பற்றியதாகும். அந்தக் கொள்கை அதிகமதிமாக வலியுறுத்தப்படும். இதனால், சமுதாயத்தின் அனைத்து வகையான […]

மேலும்....

விழிப்புணர்வு – குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள். முகப்புரை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும், – இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை […]

மேலும்....

கட்டுரை – வாழ்க்கையில், கொள்கையில் ‘எதிர்நீச்சல்’ அடித்த நடிகர் மாரிமுத்து!

… வி.சி.வில்வம் … நடிகரும், இயக்குநருமான திரு.மாரிமுத்து அவர்கள் செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் காலமானார். வளர்ந்து வந்த சிறந்த நடிகர் மட்டுமின்றி, சமூகச் சிந்தனை கொண்ட மனிதராகவும் திகழ்ந்தார்! சில படங்களில் நடித்தும், சிலவற்றை இயக்கியும் வந்த அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அதில் குறிப்பாக “எதிர்நீச்சல்” என்றொரு தொடர் பலராலும் பேசப்பட்டது! தொலைக்காட்சித் தொடர்களை விரும்பாதவர்கள் கூட, இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர். அந்தளவிற்கு சமூகத்திற்கு மனிதர்களுக்குத் தேவையான செய்திகள் அதில் இருந்துள்ளன! […]

மேலும்....