ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் மார்ச் 16-31,2023

நீதித் துறையில் காவி கலப்பு!

1. கே: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்
நாட்டில் தாக்கப்படுவதாக பி.ஜே.பி. வதந்தி பரப்பி, முதல்வரின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை முறியடிக்க முயற்சிப்பதன் மூலம், காவிக்கூட்டம் வடமாநில உணர்வை, வரும் நாடாளுமன்றக் தேர்தலில் கையிலெடுக்கவிருப்பதால், முன்கூட்டியே வடமாநிலத் தலைவர்களுக்கு சரியான புரிதலை உருவாக்க வேண்டியது கட்டாயம் அல்லவா?
                                                                                                                                                                                             – ஜானகிராமன், பல்லாவரம்.
ப: தி.-மு.க. அரசு சற்றும் சுணக்கம் இன்றி அந்த பொய் முகத்தினை திட்டமிட்ட பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து, சட்ட நடவடிக்கைகளை எடுத்தது அவர்கள் முகத்தில் அறைந்தது போன்ற விவேக, வேக நடவடிக்கை.
(நாடாளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் இது எதிரொலிக்கும்.)

 

2. கே: அவதூறு பரப்பியே அரசியல் ஆதாயம் அடைய முற்படும் அண்ணாமலைகளுக்கு திராவிட மாடல் எதிர்வினை எப்படியிருக்க வேண்டும்?
                                                                                                                                                                                              – காமாட்சி, நெல்லூர்.
ப: அவதூறுகளை உரமாக்கி வளரும் இயக்கம் என்பதை ஒவ்வொரு நாளும் பொது ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பரப்புரைகள் இவற்றின் மூலம் சூடுபோட்டு புத்தி புகட்டும் பணியை விரைந்து, நிறைந்து செய்யவேண்டும். எந்த மொழி புரியுமோ அந்தந்த மொழி
களில் எதிர்வினைகள் அவசியம்.

 

3. கே: ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் பேசுவதால் அவர்களைத் தமிழர் என்று ஏற்கும் அரைவேக்காடுகள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகிய நம்மின மக்களை ஒதுக்கி வெறுப்பதை, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு மூலம் தெளிவுபடுத்த பரப்புரை நிகழ்வுகளை பல இடங்களில் நடத்தினால் என்ன?
                                                                                                                                                                                               – த. செந்தில், மண்ணூர்.
ப: அந்தக் கூலிப்பட்டாளங்களைப் பற்றி ஏன் கேள்வி? அலட்சியப்படுத்துங்கள். அவர்களை மவுனத்தால் வெல்லுங்கள்!

 

4. கே: முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சித் திறத்தால், கிடைத்த ஈரோடு கிழக்கு வெற்றியை பணம், பரிசுப்பொருள் தந்த வெற்றி என்று திசை திருப்பும் பித்தலாட்டப் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
                                                                                                                                                                                              – மணிமேகலை, கோயம்புத்தூர்.
ப: தேர்தலில் பணம் செலவு செய்யாமலா இருந்தனர் _ எதிர்க்கட்சி வேட்பாளர்கள்? என்று மக்களே கேட்கின்றனரே! ஓணானை ஒட்டகம் பழிக்கலாமா?
தேர்தல் முறையை மாற்றிட யோசிக்கட்டும் இந்த மே(ல்)தாவிகள்!

 

5. கே: பீகார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துதானே?
                                                                                                                                                                                           – எஸ். மஞ்சுளா, செஞ்சி.
ப: அவருக்கு பீகாரில் அரசியல் நடத்திட ஆயுதம் தேடுகிறார்  யாரும் சீந்தாத சிராக். பாவம் ராம்விலாஸ் பஸ்வான்ஜி!

 

6. கே: பசுவதையை உடனே தடை செய்யப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது ஏற்புடையதா?
                                                                                                                                                                                        – விக்ரம், திருநின்றவூர்.
ப: எப்படிப்பட்ட மோசமான நீதிபதிகள் _ அரசுக்குக் கொள்கை வகுக்க அறிவுரை கூறும் அகில உலக அதிமேதாவிகளாக (ஆர்.எஸ்.எஸ்.
பக்தர்கள்) ஒன்றிய ஆட்சியில் உலாவு
கிறார்கள் பார்த்தீர்களா?

 

7. கே: கருவிலுள்ள குழந்தைகளுக்கு கீதை, ராமாயண பாடம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– சீதாலட்சுமி, புதுச்சேரி.
ப: வடிகட்டிய வெறித்தனம்! கண்டனத்திற்குரிய முட்டாள்தனம்!

 

8. கே: அர்ச்சகர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் சேர்த்து நோக்கினால் நீதித்துறையின் மீதான
நம்பிக்கை குறைகிறதே! நீதிபதிகள் விருப்பு – வெறுப்பு தீர்ப்பில் வெளிப்படுவது சரியா?
                                                                                                                                                                                      – செந்தில்வேலன், பட்டாபிராம்.
ப: அது குறிப்பிட்ட ஒரு நீதிபதியின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீட்டால் தக்க பதில் கிடைக்கும். நீதித்துறையில் காவி கலந்ததன் விளைவு!

 

9. கே: வதந்தியை செய்தியாகப் பரப்பும் இந்தியத் தொலைக்காட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                                                                                                                                                                                          – எஸ். ஜானகி, ஆரண¤.
ப: கார்ப்பரேட் காவி முதலாளிகளின் ஆளுங்கட்சிக்கான அனுதின உபயம் அது! மக்கள் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.