அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (320) – கி. வீரமணி

துடிக்கச் செய்த துரை. சக்ரவர்த்தி மரணம் சென்னை பெரியார் திடலில் 21.12.2003 அன்று நீதியரசர் பி.வேணுகோபால் அவர்களுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினோம். அவ்வுரையில்,பாராட்டுதலுக்கும் நம்முடைய நிரந்தர போற்றுதலுக்கும் என்றென்றைக்கும் உரியவராகவும், நாங்கள் பல்வேறு நிலைகளிலும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்ற உரிமையுடையவர்களாகவும் இருந்துகொண்டு பார்க்கக்கூடிய 85 வயது நிறைந்த இளைஞர் எங்கள் அய்யா நீதியரசர் வேணுகோபால் அவர்கள்! அய்யா விழா நாயகர் நீதியரசர் அவர்களுடைய இந்த 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவென்று சொல்லும்போது எத்தனையோ சிறப்புகளை […]

மேலும்....

புத்தரின் தம்மபதத்தில் பிராமணியம் தோலுரிப்பு! – தஞ்சை பெ. மருதவாணன்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு, இன்றைக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவாளர் புத்தர் ஒரு முன்னோடி! தந்தை பெரியார் அவர்களுக்கு 2442 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரை இன்றைய உலகுக்குச் சரியாக அடையாளம் காட்டியவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்களே! காலம் காலமாக பவுத்தத்தின் மீது படிந்திருந்த ஆரியக் கசடுகளைத் கழுவிக் களைந்து உண்மையான புத்தரைத் துலக்கிக் காட்டியவரும் அவரே! புத்தர் யார்? எப்படிப்பட்டவர்? தந்தை பெரியார் அடையாளம் […]

மேலும்....

நேர்காணல்

தோழர்கள் தொடங்கிய முடிதிருத்தகம் மற்றும் சலவை நிலையம்! – வி.சி.வில்வம் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.07.2023 அன்று மன்னார்குடிக்கு வருகை தந்தார். காலை முதல் இரவு வரை ஓய்வில்லாத அந்தச் சுற்றுப் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் அந்த இளைஞர். கவனத்தை ஈர்த்த அந்தக் கருஞ்சட்டை வரலாற்றைக் கீழே வாசிப்போம்! அய்யா வணக்கம்! தங்களின் பெயர், ஊர் குறித்துக் கூறுங்கள் அய்யா? என் பெயர் மாணிக்க வாசகம். மணியன் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்! 1. கே: மகளிர் உரிமைத் தொகை சரியான தகுதிகளின் அடிப்படையில் தர உறுதியளிக்கப்பட்ட நிலையில், எல்லா குடும்ப அட்டைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களுக்கு எதிரானதுதானே? நிரந்தர மாத வருவாய் உள்ளவர்களுக்கும், வசதியானவர்களுக்கும் இத்தொகை கொடுக்க வேண்டும் என்பது தப்பு அல்லவா?   – க. பன்னீர்செல்வம், பொதட்டூர். ப: அடாவடித்தனம்; எதைச்செய்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஏதாவது குறை சொல்லும் குள்ளமதியினரின் குறுக்குச்சாலைப் பொருட்படுத்தாதீர்!  பெர்னாட்ஷா சொன்னார்:“செய்ய முடிந்தவர் […]

மேலும்....

விழிப்புணர்வு – தேசிய, இன, மத, மொழி சிறுபான்மை சமூகத்தினர் உரிமை பற்றிய பிரகடனம்

இப்பிரகடனம் அய்.நா. பொதுச் சபையால் 18.12.1992 அன்று நிறைவேற்றப்பட்டதாகும். தனது அமைப்புத் திட்டத்தில் அறிவித்திருப்பதுபோல் இனம், பால், மொழி, மதவேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதனைப் பேணுதலும் அதற்குரிய மரியாதை கிடைப்பதை ஊக்குவித்தலும் அய்.நா.வின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றென்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையிலும்,அடிப்படை மனித உரிமைகளிலும் மானிடனின் கண்ணியம், மதிப்பு ஆகியவற்றிலும், சிறிதும் பெரிதுமான நாடுகளின் ஆண்-பெண் அனைவரது சமமான உரிமைகளிலும் நம்பிக்கையை மீண்டும் உறுதிசெய்யும் வகையிலும், ♦ அமைப்புத் திட்டத்திலும், பன்னாட்டு […]

மேலும்....