சித்த மாசு நீக்கல் செய்யும் அறத்தில் பெரிதென்றார்! குத்துஞ் சொல்லே காயம் கொடுக்குந் தீயின் மேலென்றார்!! பத்தும் வேண்டாம் ஒன்றே பகையை முடிக்கும் பணமென்றார்! ...
திராவிடர்கள் கொண்டாடும் திருநாள்! — பொங்கல் தொல்லுழவின் சீர்போற்றும் பெருநாள்! பிரிவினையாம் சாதிமதம் புறந்தள்ளி வைத்துவிட்டே ஓரினமாய்த் திராவிடர்கள் திரள்நாள்! — பொங்கல் உயிரொக்கும் ...
தமிழர்க் கொரு திருநாள் – அது தைத்திங்கள் முதல் நாள் சமயத்துறை அறவே – உயர் தமிழ் வாழ்த்தும் பெருநாள். நமை ஒப்பார் யாவர்? ...
பொங்கல்நாள் தமிழர்தம் வாழ்வில் இன்பம் பூக்கின்ற பொன்னாளாம்; உழைப்பின் மேன்மை பொங்கியெழும் கதிரொளியாய் ஒளிரக் கண்டு புத்துணர்வு பெறும்நாளாம்! பெருமை யாவும் தங்குகிற திருநாளாம்! ...
மனிதன் என்பவன் மானமும் அறிவும் நனிமிகப் பெற்றவன்; நல்லன கற்றவன் என்பதை எவர்க்கும் எடுத்துச் சொன்னவர் மன்பதை தன்னில் பெரியார் ஒருவரே! காடு மேடெலாம் ...
ஆரியக்கூத் தாடிவந்து தமிழ்மொழியின் நாடகங்கள் அழித்து விட்டார்! வேராகும் சாமபேதம் இசைக்கென்று தமிழிசையை வீழ்த்தி விட்டார்! ஓராமல் தமிழ்மக்கள் ஆட்டுமந்தை போலெனவே ஒப்பி விட்டார்! ...
பூமியினைப் பாயாகச் சுருட்டி – அசுரன் புகுந்தானாம் ஆழ்கடலின் இருட்டில்! சாமியொன்று பன்றியாகிப் பூமியினை மீட்டதுவாம்! கோமியத்தைக் குடிப்பார்பொய் உருட்டில் – தமிழர் கெட்டழிந்தார் ...
நின்றசொல்லர்! நீதிமன்றின் தண்ட மஞ்சி நிலைமாறா உரங்கொண்டு நிமிர்ந்த நெஞ்சில்! தென்றலென்பர்! தேடிவந்தார் தீங்க றுக்கத் தீர்வுசொல்லி ஆதரித்து நெகிழும் அன்பில்! மின்னலன்னர்! வஞ்சர்வாய் ...
முக்கனியின் சுவையிருக்கும் அண்ணா பேச்சில் முத்தமிழும் குடியிருக்கும் அவரின் நாவில் நக்கலுடன் நகைச்சுவையும் நடனம் ஆடி நதிநீராய்ப் புரண்டுவரும்! ஆரி யத்தின் மிக்கபெரும் இழிவுகளைச் ...










