உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளும் கொண்டாடும் நாடுகளும்

வை. கலையரசன் தந்தை பெரியார் ஏற்றிப் போற்றிய ஒரு விழா பொங்கல் விழா. காரணம், பொங்கல் விழா ஒன்றுதான் மத சார்பற்ற அறுவடைத் திருநாளாகவும் புராணப் பின்னணி இல்லாததாகவும் இருக்கிறது. இயற்கைக்கும், சூரியனுக்கும், விவசாயிகள் நன்றி சொல்லும் தினமாகப் பொங்கல் விழா இருக்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’என்ற பழமொழி அதனால்தான் வந்தது. அறுவடை முடிந்ததும் புத்தரிசியில் பொங்கல் வைத்து, உழவுக்கு உதவிய கால்நடைகளுக்குப் பொங்கல் பண்டிகை அன்று நன்றி சொல்வோம். அறுவடை தினத்தைக் கொண்டாடும் மரபு […]

மேலும்....

­ஆசிரியர் பதில்கள்

சனாதனம் எவ்வளவு மோசமானது என்பதை உணரவேண்டும்! 1. கே: தமிழில் பெயர் சூட்டும்  நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ள தாங்கள், இதைக் கூட்டு இயக்கமாக்க, உணர்வுள்ள இயக்கங்களை, கட்சிகளை ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவீர்களா? – து.மல்லிகா, கிழக்குத் தாம்பரம். ப: நிச்சயம் இதுபோன்ற முக்கிய பிரச்சினையில் ஒத்த உணர்வாளர்கள் அனைவரையும் குறிப்பாக தமிழ் உணர்வாளர்களை ஓரணியில் இணைத்து இந்த முயற்சியை வெற்றியாக்கிட விரைவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த முடிவு செய்து தமிழ் அமைப்புகள், […]

மேலும்....

”நம்மினம் இங்கே ஒளிபெறட்டும் ”

கவிக்கோ அ. அரவரசன் தேவகோட்டை சுறவத்தின் முதல்நாளைச் சுடரோ னுக்குத் தொல்தமிழர் நன்றியினைச் செலுத்தும் நாளாய் அறம்சார்ந்த வினைப்படுத்தி விழாவெ டுத்தார்! அந்நாளே தமிழருக்குத் திருநாள் என்று நிறைமதியர் பகுத்தறிவுத் தந்தை யார்நம் நேர்மைதவழ் அறிவாசான் பெரியார் சொன்னார்! முறையான மெய்யியலின் தொடக்கம் தானே முகிழ்த்துவரும் நம்தமிழர் திருநாள் என்பேன்! பகலென்றும் இரவென்றும் பார்த்தி டாமல் பாடுபடும் உழவர்களின் மேன்மை போற்றி அகப்பாட்டும் புறப்பாட்டும் சொல்லி டாத அகவுணர்வின் நுட்பமுடன் அதனைப் போற்றி இகழுநரும் ஏற்கின்ற வகையாய் […]

மேலும்....

காடும் – கழனியும் ஏரும் – எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்!

பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்! எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம் ஈங்கிவை தாக்கிடினும், ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட பொங்கற் புதுநாள் அன்று மட்டும் புதுப்புன லாடி புத்தாடை அணிந்து, பூரிப் புடனே விழாநடத் திடுவோம்! என்னையோ வெனில், உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே விழைவு மிகக் கொண்டோம் அதனால்! காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்? உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால். உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்? உண்டி […]

மேலும்....

பொங்கல் வாழ்த்து

ஆறு. கலைச்செல்வன் “இனியா, அடுத்து வாரம் உனக்கு தேர்வுகள் தொடங்கவுள்ளது. ரொம்ப நேரமா நீ செல்பேசியையே தடவிக்கொண்டு இருக்கியே! அப்புறம் எப்படி தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும்?” தனது பெயர்த்தி இனியாவை அன்புடன் கடிந்து கொண்டார் தாத்தா முத்துராஜா. “தாத்தா, இன்னும் த்ரீ டேய்ஸ்சில் எனக்கு பர்த்டே வரப்போவுது இல்லையா! அதை என்னோட ஃபிரண்ட்ஸ்களுக்கு மெசேஜ் பண்ணிகிட்டு இருக்கேன். அதோடு நம்ம ரிலேஷன்ஸ் எல்லோரும் வரவேண்டும்னு லைக் பண்றேன்,” என்று தாத்தாவுக்குப் பதில் சொன்னாள் இனியா. “மிக்க […]

மேலும்....