செவ்வாய் – ஆறு. கலைச்செல்வன்

“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் பாபு. “வா பாபு”, என்று இரவுப் பொழுதில் தன் வீட்டுக்கு வந்த பாபுவை வரவேற்றான் மாதவன். அப்போது அவன் தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடியில் ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருந்தான். அதன் வழியாகவும் வானில் ஒளிரும் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “நீயும் வானத்தைப் பாரேன். எவ்வளவு […]

மேலும்....

தேர்வும் நேர்வும் – கரசங்கால் கோ. நாத்திகன்

மீனாட்சி சுட்டியான பெண். அப்பா சரவணன்; ‘அம்மா லட்சுமி; காமாட்சி பாட்டி. சென்னை புறநகரில் வசிக்கும் சிறு குடும்பம். காமாட்சி அம்மா ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். சரவணனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிற்றூர். சரவணனுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு தளம் போட்ட ஆயிரம் சதுர அடி மாடி வீடும் ஊரில் இருந்தும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அய்ம்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்ததால் […]

மேலும்....

பக்தி மாயை – ஆறு. கலைச்செல்வன்

“முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை கட்டுவதா? கூடவே கூடாது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம். மக்களே! இது நம் மண். இதை நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. அரசு கட்ட நினைக்கும் தொழிற்பேட்டையை நாம் அனுமதித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே குடியிருக்க முடியாது. அதிலிருந்து வெளியேறும் வாயு நம் நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறுகளை உண்டு பண்ணும். பூமி கெட்டு நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்க […]

மேலும்....

செவ்வாய் மனிதர்கள்… – செந்துறை மதியழகன்

ஆண்டு 2050 செவ்வாய் மண்டலம், மரினர் பள்ளத்தாக்கின் விளிம்பு முகாம். “அந்தப் ப்ளாட் 145இல் தண்ணீர்ப்பாசனம் சரிவர இல்லையாம், நெற்பயிர் வாடிவிட்டதாக அதிகாலையே குறுந்தகவல் புகார்” என்ற துணை அதிகாரி அகிலனைக் கோபமாக ஏறிட்டான் நித்திலன். “யாருப்பா புகார் சொன்னது, அந்த… இந்திய அமைச்சர் தானே? இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களில் இந்த அமைச்சரிடம் இருந்துதான் நிறைய புகார் வருகிறது. வாடிக்கையாளர்க்கு நம்மால் முடிந்த அளவு சேவையைத் தருகிறோம். மற்றவர் நம் தொழில் நேர்மையைச் சந்தேகிப்பதை எக்காரணம் கொண்டும் […]

மேலும்....

சுடுமூஞ்சி

– அறிஞர் அண்ணா சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே! – கணக்கப்பிள்ளை “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது.” – மாலை விற்பவன் “ஒருநாள் கூடத் தவறமாட்டார். பெரிய பக்திமானல்லவோ அவர் மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்துவிடுவார்.” – குருக்கள் “நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது.” – வேதம் “மணி ஆறா? […]

மேலும்....