திராவிடர் இயக்கமும் பிரச்சார உத்திகளும்!

– வி.சி.வில்வம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை” வகுப்புகள் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில், திருச்சி, கே.கே.நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன . எத்தனை வடிவங்கள்! திராவிடர் இயக்கங்கள் தான், இந்த மக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக் கொள்கைகளை எத்தனை, எத்தனை வடிவங்களில் நடத்துகிறது! நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயக்கம் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், மாநாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், பாடல், […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (330)

கரூரில் திராவிடர் எழுச்சி மாநாடு — கி.வீரமணி — தேர்தலில் அ.தி.மு.க.வை திராவிடர் கழகம் எதிர்த்ததால், பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க. அரசு சிலவற்றைச் செய்தது. 02.07.2004 ஒரே நாள் தேதியிட்டு, நான்கு நோட்டீஸ்களை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழக அறக்கட்டளைக்கு அ.தி.மு.க. அரசு அனுப்பியது. 9.7.2004 அன்று வல்லம் கல்லூரி நிலங்களைப் பார்வையிட வருவதாக ஒரு கடிதமும், அறக்கட்டளைகளைக் கைப்பற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“தீக்குறளை சென்றோதோம்” என்ற ஆண்டாளின் திருப்பாவை பாட்டுக்கு_ “திருவள்ளுவரின் தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்பதே அர்த்தம் என்று பேசியவர்தான் காஞ்சி சங்கராச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

டாக்டர் டி.எம். நாயர் பிறப்பு – 15.1.1868

  திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை அமைத்த இவரை, திராவிட இயக்கத்தின் ‘இதயம்’ எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனது உரையை “எழு, விழி! இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட!’ என்றுதான் முடிப்பார். சமூகநீதியைக் காக்கப் போராடியவர். “ஷஸ்டிஸ்’ இதழின் பதிப்பாசிரியர். “திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர்.

மேலும்....

ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க விட்டுக் கொடுத்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும்!

நமது அறிவு ஆசான் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டும், அவரால் உருவாக்கப்பட்ட, மானமும் அறிவும் பெற்ற மக்கள் இன்றும் உலகெங்கும் அவரது கொள்கை லட்சியப் பயணத்தை மேற்கொண்டு அவர் விட்ட பணி முடிக்க விவேகத்துடனும், வீரத்துடனும், உற்சாகத்துடனும் வினையாற்றுகிறார்கள்! கடந்த 50 ஆண்டுகளில் உருவான பல சோதனைகளையும், அறைகூவல்களையும் நாம் _ நமது இயக்கம் மட்டுமல்ல, நமது கொள்கை லட்சியங்கள்படி நம்மோடு பயணிக்கின்ற அரசியல் திராவிடர் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் கொண்டு, களமாடி […]

மேலும்....