வீரமணியார் வாழ்கவே!

– பேராசிரியர் சுப.வீரபாண்டியன்   சுகமான வாழ்வைத்  துறந்த அறிவுப் பகலவன் பெரியார் பாதையில் நடக்கும் தமிழர் தலைவர் தன்மான வீரர் அமிழ்தினு மினிய அருந்தமிழ்ப் பேச்சினர்;   சான்றுகள் மேடையில் சாற்றி நிற்பவர் வான்புகழ் சுயமரி யாதைச் சுடரொளி எங்கள் ஆசான் வீர மணியார் எங்கும் என்றும் புகழுடன் வாழ்க!   சிறுவய திலேயே  மேடைகள் கண்டவர் அறுபது எழுபது எண்பது கடந்தும் தடைகள் இல்லை! தளர்ச்சியும் இல்லை! நடையிலும் செயலிலும் நாளும் வேகம்!   […]

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 21

– மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன் வரலாற்றில் பலவற்றைப் படித்திருக்-கின்றோம்! அமெரிக்க வரலாறு ஒரு உழைப்பின் சிகரம் என்று தான் சொல்ல வேண்டும். 200 ஆண்டுகளில் பல அற்புதங்களைப் படைத்துக் காண்பித்துள்ளனர்! அந்த உழைப்பையும் வளர்ச்சியையும் நேரில் காண்பது தான் எங்கள்  வட மேற்கு அமெரிக்கப் பயணமாக இருந்தது. கலிபோர்னியாவிலிருந்து அடுத்த வடக்கு மாநிலமான ஆரிகனுக்குச் (Oregan) சென்றோம். அந்த மாநிலம் உருவானதே அமெரிக்காவின் வளர்ச்சியின் ஒரு எடுத்துக் காட்டாக அமையும். கிழக்கு மாநிலங்களான நியுயார்க், பென்சில்வேனியாவிலிருந்து  நடுப்பகுதி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மறைமலையடிகள் சுயமரியாதை இயக்கத்தவரைத் தாக்கிப் பேசியதற்கு சுயமரியாதைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு ‘குடிஅரசு’ இதழில் பெரியார் மன்னிப்புக் கேட்டதாக ஜூனியர் விகடனில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளது சரியான தகவலா? – நா.இரவிச்சந்திரன், கோவில்வெண்மணி பதில் : தலைவர் தந்தை பெரியாரின் தனிப்பெரும் பண்புகளில் ஒன்று, பண்பட்ட விமர்சனங்களைச் செய்வது. தனது தோழர்களேகூட, அதி உற்சாகத்துடனோ, அல்லது கடும் ஆத்திரம் காரணமாகவோ, மற்றவரை வரம்பு மீறி தாக்கினால் தந்தை பெரியார் கண்டிக்கத் தயங்குவதே இல்லை. ஒரு சம்பவம் பற்றிய […]

மேலும்....

இட்லி மாவு புளிக்காமலிருக்க

வாழை இலையின் நடுத்தண்டு பகுதியைத் துண்டாக்கி, இட்லிமாவில் போட்டு-வைத்தால் புளிக்காது. மாவின் மேல் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினாலும் மாவு புளிக்காது. இட்லி, தோசை மிகவும் மென்மையாக இருக்கவும் இது உதவும். இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் கொஞ்ச தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் கழித்து, அந்த நீரை வடித்து விடுங்கள் பின்னால் ஊற வைத்த அவல், அல்லது ஜவ்வரிசி அல்லது பச்சரிசி மாவு, அல்லது கேழ்வரகுமாவு சேர்த்து வழக்கம் போல் ஊத்தப்பம் செய்யலாம், புதுச்சுவை […]

மேலும்....