வரலாற்றுச் சுவடு

52 ஆம் ஆண்டில் “The Modern Rationalist” ‘தன்மான இயக்கத்தின் பகுத்தறிவுப் போர்க் கருவி’ வை.கலையரசன் “அனைவருக்கும் அனைத்தும்”, “அறிவுக்கு விடுதலை” என்னும் உலகிற்கே பொதுவான சுயமரியாதைத் தத்துவத்தைத் தந்த தந்தை பெரியார், தமது பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழ் மண்ணைத் தாண்டியும் விதைக்க வேண்டும் என்னும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்தார். 1928ஆம் ஆண்டு “revolt” என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். மூட நம்பிக்கைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகக் கொடும் போர் புரிந்தது ‘ரிவோல்ட்.’ இதன் புரட்சிக் கருத்துகள் […]

மேலும்....

மூடநம்பிக்கை ஒழிப்பு : மாட்டு மூத்திரத்தின் மாபெரும் கேடு!

ஒளிமதி கரியமில வாயுவைவிட அபாயகரமானது _ 300 மடங்கு வெப்ப சலனத்துக்குக் காரணம் மாட்டு மூத்திரமே! பன்னாட்டு அறிவியல் அறிஞர்களின் ஆய்வு அறிக்கைகள் உறுதி செய்துள்ளது. மாட்டு மூத்திரம் கிருமி நாசினி என்றும், மருத்துவக் குணம் கொண்டது என்றும் அளந்து கொட்டும் பிற்போக்கு-வாதிகள் _ கோமாதா புத்திரர்களுக்கு’ மரண அடி கொடுக்கும் வகையில் அறிவியல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ_டெக்னாலஜி துறைப் பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.இரகுராம் கூறியுள்ளார். […]

மேலும்....

உணவே மருந்து

உடலில் சேரும் நஞ்சு நீங்க… சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள நஞ்சு வெளியேறும். அகத்திக்கீரை, தனியா, பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், பாலை வடிகட்டி, சூடாகவோ அல்லது குளிரூட்டியோ பருகலாம். கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள், மலத்துடன் வெளியேறி விடும். துவரம் பருப்பை வேக வைத்து, வடித்த நீரில் […]

மேலும்....

அறிவியல் : தண்ணீரால் வாகனம் ஓட்டி அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

வேலூர் வி.அய்.டி. பல்கலைக்கழகம் அறிவியல் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ‘நாளைய விஞ்ஞானி’ என்னும் கண்காட்சியை நடத்தியது. இதில் பெண்ணாத்தூர் அரசுப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனம் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணா-துரை மாணவரை வெகுவாகப் பாராட்டினார். வாகனத்தை ஆய்வு செய்த […]

மேலும்....

அய்யப்பன் கோயில் பழங்குடியினருக்கு உரியதே!

அய்யப்பன் கோயில் 100 ஆண்டுகளுக்கு முன் அரையன் என்ற பழங்குடி மக்களுக்கு உரிமையானதாய் இருந்தது. அவர்களே பூசாரியாயும் இருந்தனர். பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பது மரபு என்பது மோசடியானது, பித்தலாட்டமானது, உண்மைக்கு எதிரானது. அய்யப்பன் கோயிலுள் மது அருந்திச் செல்லும் பழக்கம் இருந்தது. பெண்கள் குடும்பத்தோடே தங்கி வசித்தனர். அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்லும் வழக்கமும் இருந்தது. அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பின்னாளில் பார்ப்பனர்கள் செய்த சதி! அரையன் மக்களுக்கு உரிமையான கோயிலில் பார்ப்பன […]

மேலும்....