பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரள்வோம்! – வி.சி.வில்வம்

“ஸநாதனம்’ நிலையானது, மாற்ற முடியாதது என்பார்கள். அறிவியலை அறவே ஏற்றுக் கொள்ளாத மதம் ஹிந்து மதம். ஆனால் நவீன அறிவியல் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். கைப்பேசி வழியே கடவுளைப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டாயிரம் ஆண்டு பழமையே வாழ்க்கைக்குப் போதும் என்பார்கள். அதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ‘யூடியூப்’ வழியே பிரச்சாரம் செய்வார்கள். கிறிஸ்தவர்களையும், அவர்கள் மதத்தையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டே இருப்பார்கள்.‌ அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வாட்சப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களையே பயன்படுத்துவார்கள். […]

மேலும்....

பட்டுக்கோட்டை அழகிரி ! – முனைவர் கடவூர் மணிமாறன்

தன்மானப் பேரியக்க அஞ்சா நெஞ்சன் தளபதியாய் அந்நாளில் களத்தில் நின்ற மன்னுபுகழ்ப் பெரியாரின் தொண்டர், தோழர்! மாண்பார்ந்த திராவிடத்தின் கொள்கைக் குன்றம்! பன்னரிய இழிவெல்லாம் சுமக்கச் செய்து பாழ்படுத்தி இன்புற்ற பகைவர் கூட்ட வன்மத்தை கிழித்தெறிந்த பட்டுக்கோட்டை வல்லரிமா அழகிரியை மறக்கப் போமோ! பகுத்தறிவுப் போராளி! நாட்டின் மேனாள் படைமறவர் இவராவர்! நமது முன்னோர் வகுத்திட்ட நெறியாவும் நினைவு கூர்ந்தே வன்கொடிய ஆரியத்தை வீழ்த்து தற்கே மிகத்துணிவாய்ப் பழந்தமிழர் சால்பை யெல்லாம் மேன்மையுறப் பதித்திட்டார்! மக்கள் நெஞ்சில்! […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி… நிலவில் நீர் இல்லாமல், நாம் புதிதாகக் கேட்டவுடன் வந்துவிடவில்லை. ஏற்கெனவே நிலவில் நீர் இருந்தது. ஆனால், சரியாகப் பார்க்காததால், கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று எல்லாவற்றிலும் கொஞ்சம் பிறழ்ச்சி இருந்தாலும்கூட, அதற்கான கேள்விகளை சரியாகக் கேட்கும்பொழுது, சரியான விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் சரியான பதில்களையும் உருவாக்க முடியும். அதுதான் மிகமிக முக்கியம். ஏனென்றால், நேற்று இருந்தது இன்றைக்கு இருக்காது. இன்று இருப்பது நாளை இருக்காது. ஆனால், இன்றைக்கு இருப்பது நேற்று இருந்ததைவிட சிறப்பாக […]

மேலும்....

பக்தி மாயை – ஆறு. கலைச்செல்வன்

“முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை கட்டுவதா? கூடவே கூடாது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம். மக்களே! இது நம் மண். இதை நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. அரசு கட்ட நினைக்கும் தொழிற்பேட்டையை நாம் அனுமதித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே குடியிருக்க முடியாது. அதிலிருந்து வெளியேறும் வாயு நம் நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறுகளை உண்டு பண்ணும். பூமி கெட்டு நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்க […]

மேலும்....

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி… அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள் 19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும், நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ […]

மேலும்....