ராஜாஜியின் கைங்கர்யம்

2023 ஆகஸ்ட் 1-15,2023 பெட்டி செய்திகள்

‘ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை 1943 ஆகஸ்ட் மாதமே பெற்றுத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அறிவோம். அவர் இன்னுமோர் அரிய செயலை செய்திருந்தார். ஆங்கிலேயே வைசிராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நாட்டின் நிலைமையை விளக்கி, இந்தியாவில் இருக்கிற பட்டியலின மக்களில் சிறந்த மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவேண்டும் என்றும், அதற்கான செலவை அரசே ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது, அதற்காக ஆண்டுக்கு 3,00,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அன்றைக்கு 3,00,000 ரூபாய் என்பது பெரிய தொகை. ஆண்டுக்கு 26 மாணவர்கள் அதனால் பயன்பெற்றார்கள்.

இந்தத் திட்டம் விடுதலை பெற்ற இந்தியாவில் இல்லாமல் போயிற்று. ஏன்? எப்படி?

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி இது எல்லாம் நாட்டிற்கு வீண் செலவு என்று சொல்லி அந்தத் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார். திராவிடத்தைப் பற்றி கடுமையாகப் பேசுகிறவர்கள் யாரும் இது போன்ற செயல்களை எடுத்துக்காட்டுவது இல்லை. BACKWARD COMMISSION REPORT -இல் 3ஆவது தொகுதியில் 75ஆம் பக்கத்தில் இந்தச் செய்தி இடம் பெற்றிருக்கிறது.

– பேராசிரியர் சுப.வீ.