தேர்வும் நேர்வும் – கரசங்கால் கோ. நாத்திகன்

மீனாட்சி சுட்டியான பெண். அப்பா சரவணன்; ‘அம்மா லட்சுமி; காமாட்சி பாட்டி. சென்னை புறநகரில் வசிக்கும் சிறு குடும்பம். காமாட்சி அம்மா ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். சரவணனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிற்றூர். சரவணனுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு தளம் போட்ட ஆயிரம் சதுர அடி மாடி வீடும் ஊரில் இருந்தும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அய்ம்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்ததால் […]

மேலும்....

சமற்கிருதம் செம்மொழியல்ல… – முனைவர் ப. மருதநாயகம் தம் நூல்கள் வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்… 101. சாணக்கியன் என்னும் பார்ப்பனனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச் சான்றும் இல்லை. 102. கவுடலீயம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கவுடலீயம் உட்பட்டிருக்க வேண்டும். 103. விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுபுதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர். […]

மேலும்....

உலகப் பொதுவான சூரியன் குந்திக்குக் கணவனா ? – குடந்தை வய்.மு.கும்பலிங்கன்

மகாபாரதக் கதையில் குந்திதேவி, அவள் மகன் கர்ணன் இருவருக்கும் சூரியன் உரிமையாக்கப்பட்டுள்ளான். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (விண்மீன்). அறிவியலுக்கு உட்பட்ட ஓர் ஆய்வுப் பொருள் இஃது உலகிற்கே சொந்தமானது. பொதுவானது நாடு, மொழி, மதம், இனம், ஜாதி, சமயம், குலம், கோத்திரம் அனைத்தும் கடந்தது. இயற்கையில் உருவான இந்த உலக பொதுச் சூரியனை, செயற்கையான இந்துமதக் கற்பனைக் கதையாக வருகிற மகாபாரதத்தில் ஒரு பாத்திரமான – குந்திதேவியின் கணவனாக – கர்ணனின் தந்தையாகக் காட்டவும், வர்ணிக்கவும் […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்.. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. இதையெல்லாம் தாண்டி, இன்னொன்று சொல்லுகிறார். இப்பொழுது மனிதனுடைய ஆயுட்காலம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பலப்பல காரணங்களுக்காக, 58, 60 வயதில் நம்முடைய ஓய்வு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் சொல்கிறார், ‘‘ஓய்வு, சலிப்பு எல்லாவற்றையும் தற்கொலை என்றே கருதுவேன்’’ என்கிறார். பெரிய வார்த்தை இது:- ஓய்வு, சலிப்பு எல்லாம் தற்கொலை என்பது. ஆனால், அந்தப் பெரிய வார்த்தைக்குப் பின்னால், ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்குமோ என்று உணர்ந்து பார்க்கவேண்டும். […]

மேலும்....

தமிழ்த் தாத்தா தகுதி உ.வே.சா.விற்கு உள்ளதா ? – சிகரம்

வே.சாமிநாத அய்யர் உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் நூல்களையெல்லாம் தேடித் தேடி அலைந்து பதிப்பித்தார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி, அதன் அடிப்படையில் அவரைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று பெருமைப்படுத்துகின்றனர். இவை உண்மையா? உண்மையில் தமிழில் உள்ள முதன்மையான நூல்களைப் பதிப்பித்தவர்கள் யார் என்பனவற்றை ஆதாரங்களோடு இங்குக் காண்போம். அவர் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கிய நூல்கள்: 1. சீவக சிந்தாமணி-1887 2. பத்துப்பாட்டு மூலமும் உரையும்- 1889 3. சிலப்பதிகாரம் – 1892 4. புறநானூறு- 1894 […]

மேலும்....