“காதலர் தினத்தை பசு அரவணைப்பு நாளாக அறிவித்து பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்”

2023 கட்டுரைகள் பிப்ரவரி 16-28, 2023

பிப்ரவரி 14-ம் தேதி என்பது உலக காதலர்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் வரவிருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கை:

காலப்போக்கில் மேற்கத்திய கலாசாரத்தின் வளர்ச்சி காரணமாக, நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும், மேற்கத்திய கலாசாரத்தால், நம் கலாசாரம், பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பசுக்களை அணைப்பதால் உணர்ச்சி பெருக்கு(Emotional Richness) ஏற்படுவதோடு, நமக்கு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே, பசுப் பிரியர்கள் அனைவரும், பசுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றலுடனும் வாழ பிப்ரவரி 14-ம் தேதியை, `பசு அரவணைப்பு தின’மாகக்(Cow Hug Day)கொண்டாட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு சமூக வலைதளங்களில் வைரலாக, எதிர்க்கட்சிகள் சில இதற்கு கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்தன. சமூக ஊடகங்களில் தொடர் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், சிஷீஷ் பிuரீ ஞிணீஹ் அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த நலவாரியம் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “தகுதி வாய்ந்த அதிகாரி மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வள அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிப்ரவரி 14-ம் தேதியன்று `Cow Hug Day ‘கொண்டாடுவது தொடர்பாக, இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் கூறப்பட்டதை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

                                                                                                                                                                                                                                                                                             – ழகரன்