கட்டுரை: ஆளுநர் கூறும் ஹிந்துக் கலாச்சாரம் இதுதானா?

2023 Uncategorized கட்டுரைகள் ஜனவரி 1-15, 2023

சரவண ராஜேந்திரன்

ஆளுநர் அவர்களே!
இதோ கருநாடகாவில் மட்டும் சனாதனத்
தைப் பின்பற்றும் மக்களின் சில மனிதத்தன்மை
யற்ற நடவடிக்கைகளை இங்கே தந்துள்ளோம். இது ஆங்கில மற்றும் கன்னட நாளிதழ்களில் படங்களோடு வந்தது.

 தாழ்த்தப்பட்ட பெண் தண்ணீர் குடித்த
தால் குடிநீர்த் தொட்டியை மாட்டின் சிறுநீர் கொண்டு சுத்தம் செய்த கொடூரம்!
கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேறு ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வந்துள்ளார். அந்தப் பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்தில் உள்ள உயர்ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களின் தெருவில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார்.இந்நிலையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் தங்கள் தெருவில் உள்ள குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடித்ததால் உயர்ஜாதியினர் தங்களது பகுதியில் உள்ள அனைத்து குடிநீர்த் தொட்டிகளையும் மாட்டின் சிறுநீர் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர் என்றாலும் வெளியே நிற்கவேண்டுமாம்!
கருநாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் முழுக்காட்டம்மா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராணுவவீரர் குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்யச் சென்றது. மாலை, தேங்காயுடன் அவர்கள் கோவிலுக்குள் சென்றனர். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். வழிபாடு செய்யச் சென்ற ராணுவ வீரர் குடும்பத்தினரை, அர்ச்சகர் கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கு எல்லாம் பூஜை செய்ய முடியாது எனக்கூறி, விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வை கோயிலில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது
வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ இணைய-தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தும்கூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயிலில் வழிபாடு செய்ய வந்த தாழ்த்தப்பட்ட ராணுவவீரர் குடும்பத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கதைப்பார்கள். ஆனால் குழந்தை கோவில் உள்ளே வந்ததால்…
கருநாடக மாநிலம் கொப்பால் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தை ஒன்று கோயிலுக்குள் நுழைந்ததால், அந்தக் குழந்தையின் தந்தைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்கள் அந்த ஊர் ஆதிக்க ஜாதியினர். தனது குழந்தையின் பிறந்த நாளை ஒட்டி அந்தக் கோயிலுக்கு வெளியே நின்று அவர் வழிபட்டுக்கொண்டி-ருந்தபோது அந்தக் குழந்தை திடீரென கோயில் வாசலுக்குச் சென்றுவிட்டது
இது தொடர்பாக அவரது தந்தை கூறும்போது, “நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தபோது மழைபெய்ததால் குழந்தை கோவிலின் வாசலுக்கு ஓடிவிட்டது. குழந்தையை நான் உடனடியாக தூக்கிக்கொண்டேன். ஆனால், செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த ஓர் ஊர்க்கூட்டத்தில் கோயிலைச் சுத்திகரிக்கவும், அபிஷேகம் செய்யவும் ஆகும் செலவை நான் தரவேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் கூறினர். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னிடம் ரூ.25 ஆயிரம் -_ 30 ஆயிரம் தரவேண்டும் என்று சொல்லப்
பட்டது’’ என்றார்.

விளையாட்டாக தேர்க் கம்பத்தைத் தொட்டதற்கு…
கருநாடகாவின் கோலார் மாவட்டத்திலுள்ள உல்லேரஹள்ளியில், தேர்த்திருவிழா நடந்தது. அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஊர்வலத்தில் தேரை நிலை நிறுத்த உடன் கொண்டு செல்லப்பட்ட மரத்தூணைத் தொட்டுத் தொட்டுப் பார்த்திருக்கிறான். இதைக் கவனித்த உயர்ஜாதியைச் சேர்ந்த சிலர், கிராமப்பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து, சிறுவனையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள். மேலும், “நீங்கள் தொட்டதால் தேரும், சாமி சிலையும் தீட்டாகிவிட்டது. தீட்டைக் கழிக்க வேண்டும். எனவே, சிலையைத் தொட்டதற்காக ரூ.60,000 அபராதம் செலுத்துங்கள்!” என சிறுவனின் குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறார்கள்.

 நிலைமை இப்படி இருக்க…
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையேயான பல்வேறு துறைகள் சார்ந்த உறவை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் காசி சங்கமம் என்ற நிகழ்வின் துவக்கவிழாவில் தமிழ்நாடு ஆளுநராகிய நீங்கள் கலந்து கொண்டு உரையாற்றியபோது.
“காசி முதல் ராமேஸ்வரம் வரை ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டு அதை பல்வேறு பக்தர்களும் பொதுமக்களும் பயன்படுத்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவுதான் காசி, ராமேஸ்வரம் மற்றும் காஞ்சிபுரம் இடையிலான உறவு. சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியத்திலும் கூட காசி, ராமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு இடையேயான தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றை மீண்டும் அறிமுகப்படுத்த, பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவுதான் இது. இதில் எந்த விதமான அரசியலும் கிடையாது.
மேற்கத்திய கலாச்சாரத்தைக் கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அங்கெல்லாம் ஒரு நாடு என்பது மன்னர்களால் கட்டமைக்கப்பட்டது. அது அய்ரோப்பியக் கலாச்சாரம். அங்கு மன்னருக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கும். ஆனால், பாரதம் என்பது மன்னர்களால், பேரரசுகளால் உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக அது ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் கட்டமைக்கப்பட்டது” எனக் கூறினீர்.

காசியும் ராமேஸ்வரமும் முதன்மை பெற்றது எப்போது?
யுவாங் சுவாங் தனது great tour records on the western regions என்னும் நூலில் வாரணாசி(சாரநாத்) தெற்கே காஞ்சி குறித்தும் சாரநாத்தில் புத்தரின் போதனைகளைக் கேட்டு அதனை நாடுமுழுவதும் பரப்ப பவுத்தத் துறவிகள் பயணம் மேற்கொண்டதை அடுத்து அதன் தொடர் பயணமாக காஞ்சி சாரநாத் பயணம் மக்களால் மேற்கொள்ளப்பட்டது, அதே போல் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வரும் பவுத்தர்கள் ராமேஸ்வரத்தில் இறங்கி அங்கிருந்து குழுவாகப் புறப்பட்டு சாரநாத் அதாவது இன்றைய காசி சென்றதை குறிப்பிட்டார். அவர் வரலாற்றுப் பதிவு எதையுமே மறைத்து எழுதவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
அப்படி இருக்க இதை பகுத்தறிவிற்கு எட்டாத கதையோடு வர்ணித்து இறந்தவர்
கள். ஆத்மா, மோட்சம், திதி, என்று பல
கதைகளைவிட்டு ராமேஸ்வரம் காசியாத்
திரை என்று முடிச்சுப் போட்டனர். 7 ஆம் நூற்றாண்டுவரை பவுத்தம் பரவி இருந்தது, அதன் பிறகு மெல்ல மெல்ல பவுத்தம் அழிந்து அங்கு வைணவம், சமணம் சேர்ந்தது, பின்னர் இது இரண்
டும் பார்ப்பனர்கள் கைகளில் சென்றது. இதன் விளைவு பெருவாரியான மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கவைத்துப் பிழைக்கும் கூட்டம் இன்றுவரை வாழ்கிறது.
மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முதல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவரை உள்ள சனாதன
இரு பிறப்பாளர்கள், ரிஷி முனி, ஆகியோரை உயர்ந்தவர்கள் என்று பேசிவருகின்றனர்.