மறுப்பிலக்கியம் மாற்றிலக்கியம் திராவிட இலக்கியம் – எழுத்தாளர் இமையம்

பொதுவாக அரசியல் சூழலும் சமூகச் சூழலும்தான் புதிய இலக்கியப் போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில்தான் மார்க்சிய சிந்தனை உலகெங்கும் பரவியபோது, அச்சிந்தனையை முன்னிறுத்தும் விதமாக இலக்கியங்கள் எழுதப்பட்டன. கருப்பின மக்களுடைய போராட்டங்கள் வலுப்பெற்றபோது, கருப்பின மக்களுடைய வாழ்க்கை இலக்கியங்களாக எழுதப்பட்டன. பெண் உரிமைகள் குறித்த உரையாடல் ஆரம்பித்ததும் உலகெங்கும் பெண்ணிய இலக்கியங்கள் எழுதப்பட்டன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும், காந்திய சிந்தனையும் வலுப்பெற்றபோது, அது சார்ந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன. அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி எழுந்த அரசியல் விவாதங்களின் […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்.. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. இதையெல்லாம் தாண்டி, இன்னொன்று சொல்லுகிறார். இப்பொழுது மனிதனுடைய ஆயுட்காலம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பலப்பல காரணங்களுக்காக, 58, 60 வயதில் நம்முடைய ஓய்வு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் சொல்கிறார், ‘‘ஓய்வு, சலிப்பு எல்லாவற்றையும் தற்கொலை என்றே கருதுவேன்’’ என்கிறார். பெரிய வார்த்தை இது:- ஓய்வு, சலிப்பு எல்லாம் தற்கொலை என்பது. ஆனால், அந்தப் பெரிய வார்த்தைக்குப் பின்னால், ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்குமோ என்று உணர்ந்து பார்க்கவேண்டும். […]

மேலும்....

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்! முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி! – தலையங்கம்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியைத் தந்த, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைப் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி வார்த்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் வழிகாட்டும் நெறி என்ற முப்பாலையும் குடித்து வளர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, கட்சி – ஆட்சி என்ற இரட்டைக் குதிரைகளையும் கட்டி – இந்தியாவும் – உலகமும் மெச்சத்தகுந்த கொள்கை ஆட்சி நடத்தி வரலாறு படைத்து வருகிறார் நமது மானமிகு மாண்புமிகு முத்துவேல் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கில மொழியை அகற்றமாட்டேன்” என்று 1962இல் அனைத்து மொழி பத்திரிகைகள் வாயிலாக நேரு உறுதியளித்தார் என்பதும், ”இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிக்கப்பட்டால் இந்தியா பிளவுபட்டுப்போகும்” என்று லால் பகதூர் சாஸ்திரி 1962இல் ஆந்திராவில் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....