நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

ஏப்ரல் 16-31,2022

27.3.2022 முதல் 11.4.2022 வரை

27.3.22 உ.பி.யில் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு.

27.3.22 உ.பி.யில் கணவர் கண்முன்னே இளம்பெண் கூட்டு வன்புணர்வு.

28.3.22 எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை – கருநாடக மாநில கல்வித்துறை அமைச்சர்.

28.3.22 ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலை நிறுத்தம்.

29.3.22 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு; நீதிபதிகள் எண்ணிக்கை

61 ஆக உயர்வு.

29.3.22 மதம், மொழி சார்ந்து சிறுபான்மை சமூகமாக வகைப்படுத்தலாம் – ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் பதில்.

29.3.22 இந்தியாவிடமிருந்து மீண்டும் ரூ.7,500 கோடி கடன் கேட்கிறது இலங்கை.

30.3.22 இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் – சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகளை ரத்து செய்தது.

31.3.22 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.

31.3.22 ஹிஜாப் அணிந்து மாணவிகள் பரீட்சை எழுத அனுமதித்த தேர்வு கண்காணிப்பாளர்கள் 8 பேர் இடை நீக்கம் – கருநாடக அரசு நடவடிக்கை.

31.3.22 ஹலால் உணவு ஒரு வகை ‘பொருளாதார ஜிகாத்’ – தேசிய செயலாளர் சி.டி.ரவி.

1.4.22    வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

1.4.22    நீட் தேர்வு, 14 கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்.

1.4.22    கோயில் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்.

2.4.22    கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் வீட்டின் முன்பு நள்ளிரவில் போராட்டம்.

2.4.22    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும் – நீதிபதி சதாசிவம்.

2.4.22    எஸ்.சி., எஸ்.டி. பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.

3.4.22    தில்லியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு.

3.4.22    பெங்களூருவின் அய்.டி. தலைமையை வகுப்பு வாதம் அழித்துவிடும். பயோகான் தலைவர் எச்சரிக்கை.

3.4.22    நல்ல தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள் பெட்ரோல் விலை பற்றிக் கேட்காதீர்கள் – பாபா ராம்தேவ்

4.4.22    இந்துப் பண்டிதர்கள் விரைவில் காஷ்மீர் திரும்புவார்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

5.4.22    ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம்.

5.4.22    மக்களவையில் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா நிறைவேறியது.

6.4.22    தமிழ்நாடு கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

6.4.22    ஹிஜாப், ஹலால் எதிர்ப்பைத் தொடர்ந்து, கருநாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு.

7.4.22    அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் – பொது நுழைவுத் தேர்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

7.4.22    இந்துக் கடவுளை அவமதித்ததாகப்  புகார் – அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சஸ்பெண்ட்.

7.4.22    போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11ஆம் இடம் முகேஷ் அம்பானி, 12ஆம் இடம் கவுதம் அதானி.

8.4.22    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

8.4.22    இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதியுங்கள். வெளியுறவு அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

9.4.22    ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும். – அமைச்சர் அமித் ஷா.

9.4.22    ஒற்றுமைக்கு உதவாது – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

9.4.22    பெண் பத்திரிகையாளர்கள் அவமதிப்பு விவகாரம் – நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்.

9.4.22    முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.

10.4.22 இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி.

10.4.22 மாநிலங்களை ஒருங்கிணைத்துக் குழு – கேரளா மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

11.4.22 இந்தியா என்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

11.4.22 ஹிந்தி திணிப்பு: வடமாநிலங்களில் எதிர்ப்பு.

11.4.22 பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நீக்க வேண்டும் – இலங்கை அதிபரிடம் 42 எம்.பி.க்கள் வலியுறுத்தல்.

 தொகுப்பு: சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *