உலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்!

அக்டோபர் 16-31

மாயா என்கின்ற இனத்தினரின் காலண்டர் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு எந்தவித தகவல்களும் இல்லாமல் முடிவடைகிறது. இதனால் உலகம் 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு அழிந்துபோகும் என்று சிலர் புரளியைக் கிளப்பினர். மேலும் சிலர் இன்னாளில் மிகப்பெரிய சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் என்று ஆருடம் கணித்தனர்.

வேறு சிலர் இந்த நாளில் சூரியனில் இருந்து வரும் விண்கல் பூமியைத் தாக்கும் என்றும், இதனால் பலர் வரும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றும் நல்ல காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் ஆளாளுக்கு பொய்களை அள்ளிவிட்டனர்.

மாயா இனத்தவரின் காலண்டருக்கு ஜிஹிழி என்று பெயரிட்டிருக்கிறார்கள். மாயா காலண்டர் சூரிய, சந்திர கிரகணம் முதல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய விபரங்களைப் பதிந்து வைத்திருந்தனராம். 4,600 ஆண்டு பழமை வாய்ந்த மாயன் நாகரீகம் (விணீஹ்ணீஸீ சிவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ) பிரேசில், எல்.சவேடார், கொத்தமாலா பகுதிகளில் தொடங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவியிருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றியது என்றும் கதை! இந்த நாகரிகம் 9ஆம் நூற்றாண்டோடு அழிந்து போனதாம்.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவில் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தார்களாம். மாயர்களின் காலண்டர் மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணைகொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக எல்லாம் பரப்பப்பட்டதுண்டு. மாயர்களின் காலண்டர் கி.மு.3113இல் தொடங்கி கி.பி.2012இல் நிறைவடைகிறது.

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க் கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர் கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து விலகி நேர் எதிராக பயணிக்குமாம். இதனால் புவியின் காந்தப் புலன்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும் என்று புரளி கிளப்பினார்கள். அதன்படி 2012 டிசம்பர் 21ஆம் தேதி ஏதும் நடந்துவிடவில்லை. அன்று சென்னை கடற்கரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகக் குடும்பத்தினர் இந்தப் பித்தாலாட்டத்தை அம்பலப்படுத்திப் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *