கருப்புச் சட்டை அணியாத தோழருக்கு ஒரு ரூபாய் தண்டனை! – நேர்காணல்

திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்! காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி செய்கிறார்களே, என்ன காரணம்? தனிப்பட்ட பயன்கள் எதுவும் இருக்கிறதா இல்லை பணம் எதுவும் கிடைக்கிறதா? மெழுகுவத்தியின் நிறம் கருப்பு ! எதுவுமில்லை! மாறாக நான்கு பேர் பாராட்டினால், அதே அளவு விமர்சனமும் செய்வார்கள். எதிராளிகளுக்கும் சேர்த்து, பாடுபடுவதே இந்த இயக்கத்தினர் பணி! மெழுகுவத்திகள் தன்னையே உருக்கிக் கொள்ளும்! இவர்கள் கருப்பு நிற […]

மேலும்....

சனவேலி முத்தழகு ! – வி.சி.வில்வம் 

இராமநாதபுரம், காரைக்குடி கழக மாவட்டம் சனவேலி முத்தழகு அவர்களுக்கு வயது 72 ஆகிறது. அதாவது 22 வயதில் தம் கிராமத்தில் நாத்திக வாழ்க்கையைத் தொடங்கியவர் 50 ஆண்டுகளாகச் சற்றும் பிசகாமல், குண்டூசி முனை போல நேர்குத்தி நிற்பவர்! அவ்வளவு நேர்மை! அவ்வளவு நேர்த்தி! அதே கிராமத்தைச் சேர்ந்த இரா.போஸ் அவர்கள் மூலம் இயக்கச் சிந்தனைக்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் 1970இல் சென்னையில் தொடங்கினார். 1971இல் இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் கிராமத்தில் 25 தோழர்களுடன் இவர்கள் […]

மேலும்....

செக்கடிக்குப்பம் காத்தவராயன் ! – வி.சி.வில்வம்

திண்டிவனத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது! வெளியில் நின்றவர்கள் திடீரென உள்ளே நுழைந்தார்கள், பேசிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள், தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். ஆம்! காத்தவராயன் பாடத் தொடங்கி இருந்தார். செக்கடிக்குப்பம் காத்தவராயன் என எல்லோராலும் அறியப்படுகிறார்! இன்றைய தலைமுறை இவரை அறியும் வாய்ப்புக் குறைவு. முதன்முதலில் நாமும் அவரைச் சந்திக்கிறோம்! பயிற்சி பட்டறையின் இடையிடையே இவர் பாடிய பாடல்கள் அதிரடி ரகம்! பயிற்சிக்கு வந்த புதிய மாணவர்களையும் ஈர்த்துவிட்டார்! இவ்வளவு இனிமையான குரலா? […]

மேலும்....

பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரள்வோம்! – வி.சி.வில்வம்

“ஸநாதனம்’ நிலையானது, மாற்ற முடியாதது என்பார்கள். அறிவியலை அறவே ஏற்றுக் கொள்ளாத மதம் ஹிந்து மதம். ஆனால் நவீன அறிவியல் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். கைப்பேசி வழியே கடவுளைப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டாயிரம் ஆண்டு பழமையே வாழ்க்கைக்குப் போதும் என்பார்கள். அதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ‘யூடியூப்’ வழியே பிரச்சாரம் செய்வார்கள். கிறிஸ்தவர்களையும், அவர்கள் மதத்தையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டே இருப்பார்கள்.‌ அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வாட்சப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களையே பயன்படுத்துவார்கள். […]

மேலும்....

பாரீர் ! நமது பன்னீர் செல்வங்கள் ! – – வி.சி.வில்வம்

“கடவுள் இல்லை” என்கிறார் பெரியார்! எப்படி அவர் சொல்லலாம்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கடவுள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ முடியும்? கடவுள் இல்லை என்று சொன்னால் நம் உயிர் போய்விடாதா? என்று கடும் பயத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இப்போது அந்த எண்ணம் வெகுவாகக் குறைந்து போனது. அதேபோல நீ எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம்? உன்னைப் போல நிறைய பேரைப் பார்த்துவிட்டோம், கடைசி காலத்தில் ஆன்மிகத்திற்கு வந்துதான் […]

மேலும்....