இந்தியாவுக்கு ஏற்ற மே தினம் எது ? – தந்தை பெரியார்

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை. ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான […]

மேலும்....

உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்

சமதர்மம் என்பது பேத தர்மத்துக்கு மாறான சொல். இந்த இடத்தில் நாம் அதை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்றால், மனித சமுதாய வாழ்க்கைக்கு – மனுதர்மத்திற்கு எதிர்தர்மமாகப் பயன்படுத்துகின்றோம். மனித சமுதாயத்தில் பேதநிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே மனுதர்மம் செய்யப்பட்டது. பேத நிலைக்குக் காரணம் என்ன? சமுதாயத்தில் பேத நிலையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஒன்று : மனிதன் பிறவியில் உயர் ஜாதியாய் அல்லது தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கின்றான் என்பது. இரண்டு : […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு : 21.4.1964

‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி யான கருத்துகளை- மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’ – தந்தை பெரியார் (’விடுதலை’ 29.04.1971)

மேலும்....

அறிவுலக மேதை அம்பேத்கர் ! – தந்தை பெரியார்

காலஞ்சென்ற அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்த இந்த விழாக் குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த விழா மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற வேண்டிய விழாவாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மட்டும் அல்லாமல் எல்லா மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய விழாவாகும். இந்த விழாவிற்கு மக்கள் ஏராளமாகக் கூட வேண்டும். அம்பேத்கர் தொண்டின் பெருமையை எடுத்துக் கூற வேண்டும். அவரால் நாம் அடைந்துள்ள […]

மேலும்....

டாக்டர் அம்பேத்கர் பிறப்பு : 14.4.1891

இந்தியாவிலேயே மிகவும் துணிவு கொண்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். சமுதாயத்துறையில் இவரைப் போன்ற துணிவுடைய மற்றவரைக் கூற முடியாது. நமது கருத்தை எடுத்துக்கூறுவதில் எதிரிகள் பலம், மற்ற எதிர்ப்பு ஆகியவைகளுக்கு அஞ்சமாட்டார். அவரை நான் இந்தியாவின் பெர்னார்ட்ஷா என்றே கூறுவது உண்டு. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 26.06.1965)

மேலும்....