மீண்டும் தமிழ் இயக்கம் வேண்டும்!

கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது. ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அந்த உணர்வே அவர்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு வேறு சிலர், எங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டார்கள். உண்மை அப்படியிருக்க தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழுக்கு நடப்பில் உரிய இடம் இருக்கிறதா? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! […]

மேலும்....

ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க விட்டுக் கொடுத்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும்!

நமது அறிவு ஆசான் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டும், அவரால் உருவாக்கப்பட்ட, மானமும் அறிவும் பெற்ற மக்கள் இன்றும் உலகெங்கும் அவரது கொள்கை லட்சியப் பயணத்தை மேற்கொண்டு அவர் விட்ட பணி முடிக்க விவேகத்துடனும், வீரத்துடனும், உற்சாகத்துடனும் வினையாற்றுகிறார்கள்! கடந்த 50 ஆண்டுகளில் உருவான பல சோதனைகளையும், அறைகூவல்களையும் நாம் _ நமது இயக்கம் மட்டுமல்ல, நமது கொள்கை லட்சியங்கள்படி நம்மோடு பயணிக்கின்ற அரசியல் திராவிடர் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் கொண்டு, களமாடி […]

மேலும்....

இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா?

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள், “சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது அரசு (ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் – பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது’’ என்று கூறியிருக்கிறார். அந்தக் கூட்டத்தின் தலைப்பு என்ன தெரியுமா? “பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம் (“Self Respect to BC’s”) என்பதாகும். இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்: […]

மேலும்....

தமிழனே இது கேளாய்!

தமிழா, தமிழா அடையாளம் உனக்கென்ன? எண்ணிப் பார்த்தாயா? ஆரியத்தின் அடி வருடியாய், அரசியலில் அவர்களால் ஏவி விடப்பட்ட ‘மாயமானாக’ ‘பி’ குழுவாக -_ கூலிப் பட்டாளமாய், விபீடண, சுக்ரீவ, அனுமார்களாகி சொந்த இனத்தை _ இன உரிமைகளை மாற்றார் காலடியில் வைத்து சுகம் அனுபவிக்கும் சோற்றால் அடித்த பிண்டமா நீ ? 1. தீபாவளி, 2. வருஷப் பிறப்பு – 60 வருஷ ஆபாச கதை, (ஒரு வருஷமும் தமிழ் இல்லா ஆண்டு ) 3. சரஸ்வதி […]

மேலும்....