நூல் அறிமுகம்

நூல்: கல்வித் துறையில் பேரொளியாய்… இராணி விக்டர் தொகுப்பாசிரியர்: எஸ்.ஜனார்த்தனன் வெளியீடு: மணிமேகலை பிரசுரம்,  7 (ப.எண்), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. பக்கங்கள்: 154   விலை: ரூ.100/- கல்வித் துறையில் ஆசிரியராய், தலைமை ஆசிரியராய், மாவட்ட கல்வி அலுவலராய், கல்வித் துறையில் துணை இயக்குநராய் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர் இராணி விக்டர் அவர்களைப் பற்றிய அவர்களுடன் பணியாற்றிய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் அனுபவங்களின் தொகுப்பே புத்தகமாகும். கல்வித் […]

மேலும்....

குறும்படம்

தலைப்பில்லாத குறும்படம் இது குறும்படத்தின் தலைப்பல்ல; ஆனாலும், ஏறக்குறைய 2 லட்சம் பேர்கள் வரை பார்த்திருக்கிறார்கள். கதை, “தன் திறமையை உணராததுதான் மாற்றுத் திறனாளித்தனம்’’ என்பதாக அமைந்துள்ளது. முதன்மைச் சாலை ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் (கால் மட்டும் சற்று தாங்கியபடி நடக்கிறார்) பிச்சை எடுக்கிறார். சிக்னலில் நிற்கும் ஆட்டோவை நெருங்கி அதன் ஓட்டுநரிடம் கையேந்துகிறார். அவர் மறுக்கிறார். அடுத்து, சவாரி செய்யும் நபரிடம் கையேந்துகிறார். அவர் காசு போடுகிறார். கையேந்தியவர் போன பிறகு, ஆட்டோ ஓட்டுநரிடம், […]

மேலும்....

ஆனாலும் அவர் என்றும் நம்மிடம் வாழ்வார்!

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று இயற்கை வேளாண்மை பற்றி பிரசாரம் செய்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்தார். சேகரித்த நெல்லை தன் வயலில் விதைத்துப் பெருக்கி ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துப் பரவலாக்கினார். அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல்ரகங்கள் இவரால் மீட்கப்-பட்டன. இந்த ரகங்களுக்கு இருந்த சந்தை மதிப்பைப் பார்த்து, பல விவசாயிகள் முழுமையாக பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினார்கள். இந்தப் பாரம்பரிய விதைநெல் பரிமாற்றத்தை பெரும்திருவிழாவாக நடத்தத் தொடங்கினார். `நெல் திருவிழா என்ற […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை! கே:       பார்ப்பனர்களிடையே உள்ள இன உணர்வு தமிழர்களிடையே இல்லாததற்குக் காரணம் என்ன?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           பார்ப்பனர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் (Microscopic Minority), ஒரே மொழி சமஸ்கிருதம் முதலியவற்றை வைத்து, தங்களின் வாழ்வுப் பாதுகாப்பு -_ ஒரே தன்மை (Microscopic Minority) அவர்களை ஒன்றுபட வைத்துள்ளது. உலகெங்கும் உள்ள மிகச் சிறுபான்மையினருள் ஒற்றை இனத்தவர் ஒற்றுமை என்பது அதன் அடி நீரோட்டத்தால் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரும்பான்மை-யானவர்களான திராவிடர் […]

மேலும்....

கடலில் கலக்கும் கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்க கண்டுபிடிப்பு!

கிராமப்புற பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் சாதனை! அடித்தட்டு அறிவாளிப் பிள்ளைகளை அழுத்தி ஒழிக்க ‘நீட்’ தேர்வு நடத்தி வஞ்சிக்கும், அநியாயம் செய்யும் அயோக்கியர்களால் ஒதுக்கப்படும் நம் பிள்ளைகளின் சாதனையைப் பாரீர்! விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி வட்டத்தில் இருக்கிறது கல்யாணம்பூண்டி கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஜெயச்சந்திரன். கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை எளிய முறையில் பிரித்தெடுக்கும் அவரது திட்டம், மதுரையில் நடந்த 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் […]

மேலும்....