திராவிடக் குரிசில் ஆசிரியர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

திராவிடக் குரிசில்! திக்கெலாம் புகழும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா தொண்ணூற் றிரண்டில் சுவடு பதிப்பவர் எண்ணிய எண்ணியாங் கெய்திட உழைக்கும் தறுகண் மறவர்; தகைசால் தமிழர்! வெறுப்பை விதைப்போர் வீழ்ந்திடச் செய்த பெரியார் போற்றிய பீடுசால் அரிமா! நரியார் வஞ்சகம் நசுக்கிடும் மாண்பினர்! சட்டம் பயின்றவர்! சால்போ நிறைந்தவர் திட்டம் இடுவதில் தேர்ந்தவர், தெளிந்தவர் முத்திரை பதிக்கும் முனைப்பு மிக்கவர்! பத்தாம் அகவைச் சிறுவனாய் இருந்த காலம் முதலே காந்தச் சொற்களால் ஞாலம் மதித்திடும் மாண்பைப் […]

மேலும்....

அய்யாவின் ஆயுதங்கள்- கோனூர் இராதா கோபாலகிருஷ்ணன், சேலம்.

மானத்தைத் தொலைத்த தமிழ்ச் சமுதாயத்திற்கு – -அதை மீட்டுத் தந்த மாவீரர் எங்கள் பெரியார்… கடந்த நூற்றாண்டோடு சமாதி கட்டப்படவிருந்த -– இந்த இனத்தையும், மொழியையும் அடுத்த நூற்றாண்டின் கைகளில் கொண்டுசேர்த்த சுமைதாங்கி எங்கள் பெரியார்… பதவிக்காக கொள்கையில் சமரசம் ஆகாதென நாற்காலி மீது நாட்டமில்லாத நாத்திகர் எங்கள் பெரியார்… பல நூற்றாண்டாய் கூன்விழுந்து கிடந்த தமிழனை வான் நிமிர்த்திய வல்லவர் எங்கள் பெரியார்… ஆரிய ஆதிக்கத்தை வெங்காய வெடிகுண்டு வீசியே விரட்டியடித்த போராளி எங்கள் பெரியார்…. […]

மேலும்....

பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் இவ்வாறாய் ஊருக்குள் இக்கிறுக்கன்! ஆகாய விமானத்தில் ஆஸ்திரேலியா போனானா? அஞ்சனை மைந்தனைப் போல் ஆகாயத்தில் பறந்தானா? பாவமாம் புண்ணியமாம் பிறவிப்பலன் கல்வியே ஞானமாம் பெரியார் பிறந்த மண்ணில் பிதற்றுகிறான் என்ன துணிச்சல்? வீறுகொள் மாணவப் பருவத்தைச் சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்! ஆன்மிகப் பேச்சென்று அளந்து கொட்டுவோர் வரிசையில் இப்போது இவன் புதுவரவு! […]

மேலும்....

கேட்டுத் தொலைப்பாயா ? ! – திருப்பத்தூர் ம. கவிதா

குழந்தை சுமந்தாள் பத்தியமிரு என்றனர் பத்து மாதம் இருந்தாள் முடித்தாளில்லை… குழந்தை வளர்க்க வாய்மூடி மவுனியாய் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளில்லை… பிள்ளைகள் படிக்க இருபத்து ஆண்டுகள் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளா? இல்லை! மகளுக்கு மகனுக்கு நல்லபடி மணம் முடிக்க வாய்ப்பூட்டுப் போட்டு பத்தியம் தொடர்ந்தாள்! பத்தியத்திற்குள் இருந்திருந்து பழகிப் போய்விட்டது அவளுக்கு! விருப்பையும் காட்டாமல் வெறுப்பையும் காட்டாமல் வெறுமனே கடக்கிறது கிடைத்தற்கரிய ஒரே வாழ்வு! இளமை இப்போது வற்றி இறுக்கி அண்டும் நோயால் மீண்டும் பத்தியக்காரியாய் மருத்துவர்கள் […]

மேலும்....

பகுத்தறிவு ஒளி பரப்புவோம் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே எய்திடும் கணைகள் தம்மால் இழிவுகள் சுமக்கச் செய்வார்! மருட்டியே மனுநூல் சொல்லும் மந்திரம் வெல்லும் என்பார்! சுருட்டியே பிழைப்போர் நம்மைச் சூத்திரன் என்றே மூட இருட்டினில் கிடத்தி மேன்மை ஏற்றமும் தடுப்பார்! பொல்லா உருட்டலால் பூதம் பேய்கள் உண்டென நாளும் ஏய்ப்பார்! ஆரிய நஞ்சால் நெஞ்சில் ஆரிருள் படரச் செய்தே வீரியம் […]

மேலும்....