அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (333)

திருச்சியில் வி.பி.சிங் அவர்களின் கவிதை நூல் (தமிழ் பெயர்ப்பு ) வெளியீடு ! பேராசிரியர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் தமது 66ஆம் வயதில், 21.9.2004 அன்று மதுரையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். ஒரு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரப் பணிகளைச் செய்தவர். பின் அரசியலுக்குச் சென்று, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளை வகித்தார். அவரது இணையருக்கு நமது இரங்கல் செய்தியை அனுப்பி ஆறுதல் கூறினோம். பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவர்கள் […]

மேலும்....

பெரியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்!

பெரியாரை விதவிதமாக வரைகிறார்கள்; எவ்வளவு கோணல் புத்தியுடன் முடியுமோ, அவ்வளவு வரைகிறார்கள். ஆக பெரியார் நினைப்பாகவே இருக்கிறார்கள்! சென்ற மாதம் அவரைப் பன்றியாக வரைந்தார்கள், பின்னர் பன்றி மேய்ப்பவராக வரைந்தார்கள். எப்படியாவது கேவலப்படுத்திவிட நினைக்கிறார்கள். பெரியாரின் கருத்திற்குப் பதில் சொல்லி, அவரை யாரும் வெல்லலாம்! ஆனால், அது அறிவு சார்ந்த விசயம். முதலில் அவரைப் படிக்க வேண்டும்; பின்னர் அதை மறுக்க வேறு நூல்கள் படிக்க வேண்டும்; பிறகு இரண்டையும் சிந்திக்க வேண்டும்… இதெல்லாம் நடக்கிற காரியமா? […]

மேலும்....

பெரியார் யார் ?

நூல் குறிப்பு : நூல் பெயர் : மானம் மானுடம் பெரியார் ஆசிரியர் : சு. அறிவுக்கரசு வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம் பக்கங்கள் : 440 விலை : ரூ.300/- பெரியார்! 20ஆம் நூற்றாண்டின் சமூக வரலாற்றின் செம்பகுதியைச் சீர்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்! மூன்றாண்டுகள் மட்டுமே பள்ளிக்குச் சென்று படித்தவர். அறிவியலோ, வரலாறோ, கணிதமோ, சமூக அறிவியலோ, பொருளாதாரமோ படித்தவர் அல்லர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அந்தக் காலத்தில் இவையெல்லாம் ஏது? அவர் கற்றுக்கொண்டதெல்லாம் தமிழில் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மில்லியன் டாலர் கேள்வி ! 1. கே : கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களே இல்லாத நிலை உள்ளது. இது, ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நிறைவேற்றுவதற்கா? – ராம்குமார், சென்னை. ப : அதிலென்ன அய்யப்பாடு ! இன்னமும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இந்தப் பிற்போக்குத்தனம்- மகளிரை பெருநிலைக்கு உயரவிடாமல் ஆண் ஆதிக்கம் படமெடுத்தாடும் நிலை உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்களுக்குச் சிறப்பு இடமே இல்லை என்பதே அதற்குரிய சாட்சியம். […]

மேலும்....

அறிவுச் சுடர் – ஆறு. கலைச்செல்வன்

தனியார் பள்ளி ஒன்றில் மிகக்குறைந்த ஊதியத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளைஞன் சேதுபதிக்கு நகர வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் “நெடிய ஓட்ட நாயகன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் மட்டுமல்லாமல் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. பலத்த கைத்தட்டலுக்கிடையே அவற்றை வழங்கியபின் நகர வணிகர் சங்கத் தலைவர் பழநி அவர்கள் நெடிய ஓட்ட நாயகன் பட்டம் பெற்ற சேதுபதியைப் பாராட்டிப் பேசினார். “இங்கே நெடிய ஓட்ட நாயகன் என்னும் பட்டத்தைப் பெற்ற […]

மேலும்....