தகவல்

தீர்மானம் 3:மக்கள் பேற்றை அடக்கி ஆளுதல் குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல்நலனை முன்னிட்டும் கர்ப்பத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உரிமையாக இருக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது; தேவைப்பட்டால், இதற்கான தனி சட்டத்தையும்கூட மத்திய அரசு இயற்றவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. (10.03.2007இல் திருவொற்றியூரில் […]

மேலும்....

அறிவியல் கட்டுரை : விண்வெளி பயணங்கள்

  கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின் இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பயணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை _ -சொல்வதைப் பற்றி சிந்திக்கும் சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது” என்றார் தந்தை பெரியார். “மாறுதல் என்ற வார்த்தையைத் […]

மேலும்....

கலைஞரைப் போற்றுவோம் : பெரியாரின் பாராட்டு!

அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழ்நாட்டுப் பெருமக்கள் அனைவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஓர் ஆட்சி மாறினால், இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோ கதி ஆகிவிடுமென்று துணிந்து சொல்லும் அளவுக்கு மக்கள் நல ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதுடன் மிகவும் பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றி வருகிறது. மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது […]

மேலும்....

உடல்நலம்: நோய் எதிர்ப்பு சக்தி என்னும் காப்பரன்

கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்கிறோம். நாள்தோறும் புதிது புதிதாகப் பெயரிட்டு ‘வைரஸ்’ மாற்றமடைந்து வருவதாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தித் தாள்கள் மூலமும் அறிகிறோம். நோய்த் தொற்று பரவும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்னும் சத்து உடலில் சரியான அளவு இருப்பின், கரோனா அலைகளிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்! ஒரு குறிப்பிட்ட நோயை அல்லது பொதுவாக ஏற்படும் சில நோய்களை நம் உடலே எதிர்த்துப் போராடும். அதற்காக வெளியிலிருந்து சிகிச்சைகளோ, […]

மேலும்....

பெண்ணால் முடியும் : ஏழ்மையிலும் லட்சியத்தை வென்ற ரேவதி வீரமணி

மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர், 23 வயதாகும் ரேவதி வீரமணி. தனது 4 வயதில் பெற்றோரை இழந்தார். அதற்குப் பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார் ரேவதி. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது, காலில் ஷூ இல்லாமல் மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார் ரேவதி. அப்போது மதுரை அரசு பந்தயத் திடல்  பயிற்சியாளராக இருந்த கண்ணன், ரேவதியின் திறமையைக் […]

மேலும்....