பதிவுகள்

ஜூலை 01-15
  • ஒரிசா மாநிலம் சாண்டிப்பூர் ஏவுதளத்தி லிருந்து ஆயிரம் கிலோ வரை எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் பிரித்வி-  2 ஏவுகணை ஜூன் 9 அன்று வெற்றிக ரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் ஜூன் 9 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
  • சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 10 அன்று இடைக் காலத் தடை விதித்து, இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்றும் ஆணையிட்டது. தமிழக அரசு  ஜூன் 13ல்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களே வழங்கப்படவேண்டும் என்றும், பிற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்விதான் அமல்படுத்தவேண்டும் ஆயினும் பாடங்களைத் தேர்வு செய்ய குழு அமைத்து 3 வாரத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..
  • மும்பை தாக்குதல் வழக்கில் தீவிரவாதி ரானாவை விடுதலை செய்து அமெரிக்க நீதிமன்றம் ஜூன் 10இல் தீர்ப்பளித்துள்ளது.
  • இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா ஜூன் 10 அன்று ரத்து செய்தார்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா ஜிலானி ஜூன் 10 அன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு ஜூன் 12 அன்று விடுவிக்கப்பட்டார்.
  • இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சேவை ஜூன் 11 அன்று சந்தித்துப் பேசியுள்ளது.
  • தூத்துக்குடி – கொழும்பு இடையேயான கப்பல் போக்குவரத்து 104 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 13 அன்று தொடங்கியது.
  • தனியார் பள்ளிகளின் முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு ஜூன் 13 அன்று வெளியிட்டது.
  • கேரளாவில் 41 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேனாள் அய்.ஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஜூன் 14 அன்று கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • வேலையில் அமர்த்தப்படும் கிராமத்தில் தங்காத நிருவாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜூன் 16 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • மத்திய கலால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றக் கிளை ஜூன் 15 அன்று தள்ளுபடி செய்தது.
  • சி.பி.சி.அய்.டி கூடுதல் டி.ஜி.பி.யாக ஆர்.சேகர் ஜூன் 17 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் ஜூன் 19 அன்று முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *