எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (81)

பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா நேயன் “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு.’’ இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. பாரதி மீசை வைத்து பிராமண கலாச்சாரத்தைத் தகர்த்து, ஜாதியை ஒழிக்கப் பாடுபட எண்ணுகிறார் என்று நினைக்கலாம். ஆனால், […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [35]

நீரிழிவு நோய் (DIABETES MELLITLIS) நீரிழிவு நோய் வெறும் மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியாது. சர்க்கரையின் அளவை இரத்தத்தில் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவையும் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த இரண்டோடும் மருந்துகளும் எடுத்துக் கொண்டால் நோயை முழு அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். உணவுக் கட்டுப்பாடு: *             மீன், தோலற்ற கோழி உண்ணலாம் *             ஆலிவ் ஆயில் கொட்டைகள் உண்ணலாம். *             இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். *              கரையும் கொழுப்பு […]

மேலும்....

கவிதை : கழகம் தமிழரின் காவல் அரண்!

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி கழகம் என்பது தமிழரின் காவல் அரணாகும் காலைக் கதிரை வாழ்த்தும் சேவல் குரலாகும் பாட்டாளித் தோழரின் பாதம் கழுவும் கடல் அலையாகும் படைபல வரினும் பயந்து நடுங்கிடா இமய மலையாகும் பசித்திடும் ஏழை மக்கள் பட்டினி களைந்து புசித்து மகிழ்ந்திடப் பொங்கிடும் உலையாகும் பழமைக்குப் பரிவட்டம் கட்டி வரவேற்று புதுமைக்கு வாசல் கதவடைக்கும் வஞ்சகரின் அறிவுக்குத் தெளிவேற்றி ஒளியேற்றி அய்யன் வள்ளுவரின் நெறி போற்றி அகழ்ந்திட அகழ்ந்திட நிறைந்து வழிந்திடும் அன்பின் ஊற்றாகும்; […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….இயக்க வரலாறான தன் வரலாறு (274)

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு கி.வீரமணி தமிழ்நாடு ஆளுநர் மேதகு டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள் 2.12.1996 அன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அவரது அணுகுமுறையில் நமக்கு மிகவும் மாறுபட்ட கருத்து உண்டு என்றபோதிலும்கூட, நாட்டின் சிறந்த நிருவாகிகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆந்திரத்தில் அவரது பொதுவாழ்க்கை மிக முக்கிய வரலாற்றுச் சுவடுகளைப் பதிப்பித்துள்ளது. அவரது மறைவுக்காக திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த […]

மேலும்....

வரலாற்று நாயகன் : கலைஞர் என்னும் போர்வாள்

கவிஞர் நந்தலாலா இப்போது வெளிவந்து பரபரப்பாய்ப் பேசப்படும் படம் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தில், கபிலனும் வேம்புலியும் ஆக்ரோஷமாக மோதி, கபிலன் ஜெயிக்கப் போகும்போது போலீஸ் உள்ளே வரும். குத்துச்சண்டை வாத்தியாரான ரங்கனிடம் (பசுபதி) தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது; உங்களைக் கைது செய்ய வந்துள்ளோம் என்று போலீஸ் சொல்ல, கலவரம் உருவாக்கப்படும். பாக்ஸ்சிங் தடைபடும். தி.மு.க.காரரான வாத்தியார் ரங்கன் கைதாவார். அவசரநிலை காலத்தில் கலைஞரின் அரசு கலைக்கப்பட்ட வரலாற்றை கதையின் முக்கிய திருப்பத்துக்கு ரஞ்சித் ‘சார்பட்டா’ படத்தில் […]

மேலும்....