மாயவரம் சி.நடராசன்

தந்தை பெரியார் காங்சிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு ஒன்றி நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். இவர் மாயவரத்தில் 7.1.1902 இல் ந.சிதம்பரநாதன் – மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தார். ‘‘காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராசனை அறியாதவர் வெகு சிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தமக்கென வாழாதவர். தமக்கென ஒரு அபிப்பிராயமும் காட்டிக்கொள்ளாத போர் […]

மேலும்....

இராமரே தகர்த்தபின் இராமர் பாலம் ஏது?

மஞ்சை வசந்தன் இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் எடுத்துச் சொல்லும்போது, இல்லை யில்லை, இது எங்கள் மத நம்பிக்கை _ எங்கள் புராணங்கள் கூறும் செய்திகளின்படி நம்பிக்கை _ அந்த நம்பிக்கைக்கு விரோதமாக அதை இடிக்கக்கூடாது என்று எதிர்வாதம் செய்வதோடு, இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று எங்கள் நம்பிக்கையின் சின்னமான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். […]

மேலும்....

இந்தி எதிர்ப்பு ஈகையர்

ல.நடராசன் இந்தி மொழித் திணிப்பும் அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டக் களம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது என்பது கண்கூடு. 1938இல் முதன்முதலாக இந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழர்கள் போராட்டக் களம் கண்டனர். அந்தப் போராட்டத்தின் முதற்களப்பலியானவர்தான் ல.நடராசன். போராட்டத்தில் குதித்ததால் 1938இல் டிசம்பர் 5ஆம் நாள் இவர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். சிறைச்சூழல் ஒவ்வாமையால் இவருக்கு முகத்தில் சில பருக்கள் தோன்றின. வீக்கமும் நோவும் உண்டாயிற்று. சிறைச்சாலை மருந்தகத்தில் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (114)

தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி! நேயன் வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். அக்னி, வாயு, வருணன், மேகம்(இந்திரன்), ருத்திரன் போன்றவற்றை வழிபட்டனர். வேதத்தில் வரும் ருத்திரன் சிவன் என்று இட்டுக்கட்டிக் கூறுவது தப்பு. சிவன் வழிபாடு ஆண், பெண் உறுப்பு வழிபாட்டின் பரிணாமம். ருத்திரன் என்பது உருவ வழிபாடு இல்லாத காலத்தில் ஆரியர்கள் வணங்கியது. தமிழரின் உறுப்பு வழிபாடு ஆரியர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: பொது எதிரியை முன்னிறுத்துவோம்!

கே: வானூர்தி நிலையங்களையும் குத்தகைவிட முடிவெடுத்துவிட்டார்கள்! ஒன்றிய பா.ஜ.க. அரசின் இம்முடிவு பற்றித் தங்கள் கருத்து என்ன? – கோவர்தன், வையாவூர். ப: இந்தத் திட்டத்தின்கீழ் ‘சர்வம் கார்ப்பரேட்மயம்’ _குறிப்பாக, அடானி, அம்பானி,டாடா மயம் விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் எல்லாம் குத்தகை என்பது ஒருபுறம்; இடஒதுக்கீட்டை ஒழிக்கும் தனியார்துறை ஆதிக்கம் மறுபுறம். கேட்டால், விற்கவில்லை குத்தகைக்கு விடுகிறோம் என்றநிலை. நாட்டையே குத்தகை விடாமல்இருந்தாலொழிய _ 2024 தீர்வு ஏற்பட்டால் ஒழிய, நாடு மிக வேகமான கீழிறக்கம் […]

மேலும்....