மக்களைப் பணியச் செய்ய வேண்டும்

2024 Uncategorized கட்டுரைகள் மற்றவர்கள் ஜனவரி 1-15, 2024

(யூதர்களின் இரகசிய அறிக்கை)

மக்களை அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்த-வர்களாக நடக்கச் செய்ய வேண்டுமென்பதால், அவர்களுக்குப் பணிவு குறித்து பாடம் எடுக்க வேண்டும். மேலும் ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்க வேண்டும். அதீத ஆடம்பர வாழ்க்கை காரணமாக அவர்களிடம் ஒழுக்கம் என்பது அடியோடு குறைந்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு எளிமை உள்ளிட்ட ஒழுக்க விழுமியங்களைக் கற்பிக்கலாம்.

சிறுதொழில்கள் உற்பத்திகளை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், பெரு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு வேட்டு வைக்க வேண்டும் என்பதுதான். இது மிகவும் அத்தியாவசியமானது.

காரணம், மிகப்பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள், அறிந்தோ அறியாமலோ தொழிலாளர்களை எப்பொழுதும் அரசுக்கு எதிரானவர்களாக மாற்றுகிறார்கள். சிறுதொழில்-கள் அதிகம் இருக்கும்பட்சத்தில், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதில்லை. மக்கள் அரசுக்கு எதிராகக் கலகங்களில் ஈடுபடாமல் ஒத்திசைவாக இருப்பார்கள். இதனால் ஆட்சியின் நிலைத்தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நாம் ஆட்சிக்கு வந்தவுடனேயே, வேலையில்லாத் திண்டாட்டங்களை ஒழிக்கும் வகையிலான செயல்திட்டங்களை நிறைவேற்றுவோம். குடிப்பழக்கம் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படும். குடிபோதை பழக்கம் இருக்கிறதே. அது மனிதத் தன்மையை இழக்க வைத்து அவனை மிருகமாக மாற்றுகிறது. இதனால்

அந்தப் பழக்கம் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
நான் மீண்டும் கூறுகிறேன் பொதுமக்கள் வலிமையான கைகளுக்கே கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படுவார்கள். ஆனால், அந்தக் கைகளோ மக்களை எந்த வகையிலும் சார்ந்திருக்கக் கூடாது. அப்போதுதான் அந்தக் கைகளை, மக்கள் தங்கள் பாதுகாப்புக் கேடயமாகக் கருதுவார்கள் என்பதோடு, சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டங்களில் நமக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். தங்களை ஆளும் ஆட்சியாளர்கள் தேவர்களுக்கு (வானவர்களுக்கு) ஒப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பக் காரணம் என்ன? ஒருங்கிணைந்த வலிமை, சக்தி ஆகியவற்றை அரசரின் உருவத்தில் காண்பதற்கு மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

ஒழுக்கங்கெட்டவர்களாக நம்மால் உருமாற்றப்பட்டுள்ள இந்தச் சமுதாயங்களின் நடுவே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களை நம்முடைய பேரரசர் விரட்டியடிப்பார். கடவுள் ஒருவரின் அதிகாரத்-தையே மறுப்பவையாக அந்தச் சமூகங்கள் உள்ளன. யாருக்கும் கட்டுப்படாத மக்கள் கூட்டம் அந்தச் சமுதாயங்களின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. ஆகையால், இந்தச் சமூகங்களில், பற்றி எரியும் தீமை என்னும் தீயை நம் பேரரசர் முதலில் அணைக்க வேண்டும். தனது இரத்தத்தைச் சிந்தியாவது அந்தத் தீயை அவர் அணைப்பார். கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ளக் கூடிய படையாக அந்தச் சமூகங்களை அவர் மாற்றுவார். அரசாங்கம் என்னும் உடலில் வலி ஏற்படுத்தக்கூடிய அனைத்து வகையான நோய்களை எதிர்த்தும் அந்தப் படை தானாகவே சண்டையிடும்.

அறிவில்லாமல் மன இச்சையின்படியும்,மனிதத்தன்மை இல்லாமல் மிருகத்தன்மை-யோடும் நடக்கத் தூண்டும் தீய சக்தியை அழிப்பதற்காக, கடவுளால் நம் கூட்டம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இன்று பல்வேறு வகையான கொள்ளைகளிலும், வன்செயல்களிலும் ஈடுபட்டு வெற்றிக் களிப்பில் தீய சக்திகள் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன. அந்தத் தீய சக்திகளுக்கு, ‘மனித சுதந்திரம்’, ‘மனித உரிமைகள்’ என்ற முகமூடிகள் அணிவிக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் நிலைநாட்டப்பட்டிருந்த எல்லா வகையான ஒழுங்குகளையும் அத்தகைய கொள்கைகள் தூக்கியெறிந்துவிட்டன. யூத அரசரின் ஆட்சியை இந்தப் பூமியில் நிலைநாட்டவும் அவையே வழிவகை செய்திருக்கின்றன. ஆனால், நம் யூத அரசர் உள்ளே வரும்போது, அந்தச் சித்தாந்தங்கள் வெளியே தூக்கி எறியப்படும். அவருடைய பாதையில் இருந்து அவை துடைத்தெறியப்படும்போது, அதன் தடயமோ சிறு துரும்போ கூட எஞ்சாத வகையில் பார்த்துக்கொள்வோம்.
அதன்பிறகு, மக்களிடம் நாம் இவ்வாறு கூறலாம்: ‘கடவுளுக்கு நன்றி கூறுங்கள். மேலும் அவருக்குச் சிரம் பணியுங்கள். அவரே மனிதனின் தலைவிதியை அவன் முன்நெற்றியில் முன்கூட்டியே முத்திரையாக்கி வைத்திருக்கிறார். அவரே தனது ஒளி நட்சத்திரத்தை வழிநடத்தினார். அவரைத் தவிர வேறு யாராலும் அது முடியாது. மேற்சொன்ன தீமைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை விடுவிப்பாராக,

தாவீது அரசரின் வழிவந்த ஆட்சியாளர்களை, இந்தப் பூமியில் நிலைப்படுத்தும் வழிமுறை பற்றி இப்பொழுது உங்களுக்கு நான் கூறுகிறேன்.
உலக விவகாரங்களை எப்படி நிருவாகித்துச் செல்ல வேண்டும் என்பதையும், உலக மக்களின் சிந்தனையை நமக்கு ஏதுவான திசையில் எவ்வாறு வழிநடத்திச் செல்ல முடியும் என்பதையும் நம்முடைய கற்றறிந்த பெரியார்கள் எப்படி அறிந்து வைத்திருக்கிறார்களோ, அந்தப் பாரம்பரிய ஞானத்தை முறைப்படி கற்பதன் மூலம்தான் நம்முடைய பரம்பரை ஆட்சியைத் தக்கவைக்க முடியும். அதுதான் முதல் தேவை.

தாவீது பரம்பரையில் வந்த அவருடைய வாரிசுகளில் சிலரே, ஆட்சிப் பெ.றுப்பேற்கப் போகிற அரசர்களையும், அவர்களின் வாரிசுகள் யார் என்பதையும் முடிவு செய்வார்கள். வாரிசு முறை என்று மட்டுமல்லாமல், தகுதிகளை மய்யப்படுத்தியே அரசர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அத்தகையவர்கள், பல்வேறு வகையான அரசியல் தந்திரங்களிலும், நடவடிக்கைகளிலும் பயிற்றுவிக்கப்படுவார்கள். ஆனால், அதன் முழுமையான ஆழ்ஞானம் அவர்களுக்குக் கற்றுத் தரப்படமாட்டாது. எல்லோரும் அறிந்ததுதான். அரசியல் இரகசியங்களைக் கற்றறிந்த ஒருவராலேயே தவிர, வேறு யாராலும் ஓர் அரசாங்கத்தைத் திறம்பட நடத்திச் செல்ல முடியாது.

கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களை நடைமுறை ரீதியில் செயல்படுத்துவது எப்படி என்ற இரகசியம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே சொல்லிக் கொடுக்கப்படும். அரசியல், பொருளாதார நடப்புகளிலும், சமூக அறிவியலிலும் பல நூற்றாண்டுகளாக நாம் உன்னிப்புடன் கவனித்துக் கற்றறிந்த விஷயங்கள், வரலாற்று நிகழ்வுகளின் ஒப்பீட்டு முறையில் சொல்லிக் கொடுக்கப்படும். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், மனித உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான அனைத்துச் சட்டங்களின் சாராம்சத்தையும் இயற்கை தன் பால் கொண்டுள்ள நிலையில், அதைப்பற்றி விரிவான பாடம் நடத்தப்படும்.

அலட்சியம், கோழைத்தனம், இன்னும் அதுபோன்ற பண்புகளை அரசரின் நேரடி வாரிசுகள் கொண்டிருந்தது. அது அவர்களின் பயிற்சிக் காலத்தில் கண்டறியப்பட்டால் அரியணை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய பண்புகள் யாவும் ஆட்சியையே அழிக்கும் தன்மை உடையவை. அப்படிப்பட்ட இயல்புடையவர்கள் நிருவாகம் செய்ய லாயக்கற்றவர்கள் என்பதோடு, ஆட்சி அதிகாரத்துக்கும் ஆபத்தானவர்கள்.
எல்லாக் காலங்களிலும் யார் உறுதியாக இருக்கிறார்களோ, அவர்கள் கொடூரத்தன்மையுடன் இருந்தாலும் சரி, அப்படிப்பட்டவர்களுக்கே நமது கற்றறிந்த பெரியார்களிடமிருந்து நேரடி ஆட்சிப் பொறுப்பு கிடைக்கும்.

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் ஊக்கக்குறைவாக இருந்தாலோ அதுபோன்ற வகையிலான இயலாமைகள் உடையவராக இருந்தாலோ தகுதியுடைய வேறு ஒருவரின் கைகளில் ஆட்சியை சட்டப்படி ஒப்படைக்க வேண்டும்.
அரசர் அடுத்து என்ன செய்யப்போகிறார், அவருடைய திட்டம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஏன், அவருக்கு நெருக்கமாக உள்ள ஆலோசகர்கூட அதை அறிய மாட்டார்.
அரசருக்கும் அவரை நியமித்த அந்த மூன்று பேருக்கும் மட்டுமே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருக்கும்.
யாருக்கும் எதற்கும் வளைந்துகொடுக்காத மன உறுதி கொண்ட அரசனே தன்னையும் கட்டுப்படுத்தி, மக்களையும் கட்டுப்படுத்தும் தகுதி பெற்றவன். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான், நடப்பவை எல்லாம் தெய்வாதீனமாகவே நடக்கிறது என்று மக்கள் கருதுவார்கள். அரசரின் மனநிலை என்ன, அவர் எதை நாடுகிறார் என்பதை யாரும் அறியமாட்டார்கள். ஆகையால், அறியப்படாத அவருடைய வழியில் குறுக்கிடும் துணிச்சல் யாருக்கும் வராது.
அரசாங்கத்தை வழிநடத்துவதற்குத் தேவையான திட்டங்களை வகுக்கக்கூடிய அளவுக்கு அரசருக்கு அறிவுக்கூர்மை இருக்க வேண்டும். ஆகையால், முன்னரே குறிப்பிட்டபடி, நமது கற்றறிந்த பெரியார்கள் நடத்தும் அறிவுக்கூர்மைக்கான சோதனைகளில் வெற்றி பெற்றவருக்கே ஆட்சிப் பீடத்தில் ஏற வாய்ப்பு தரப்படும்.
அறிந்தும் புரிந்தும் அரசர்மீது மக்கள் அன்பு செலுத்த வேண்டும் என்பதால், பொதுமக்கள் கூடும் சந்தைகளுக்குச் சென்று அவர் உரையாடுவது மிகவும் அவசியம் ஆகிறது. அதனால் மக்கள்-_ ஆட்சியாளர் என்ற இருபெரும் சக்திகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. தற்காலத்தில் நமது பயங்கரச் செய்கைகளால் அந்த இரண்டு சக்திகளையும் பிரித்து வைத்திருக்கிறோம்.

அந்த இரண்டு சக்திகளையும் பிரிக்கும்போது
தான் அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக நம் ஆதிக்கத்திற்கு உட்படும். எனவே, அவற்றைப் பிரித்து வைக்கும் செய்கையைத் தொடர்வது மிகவும் அவசியமாகிறது.

யூத அரசர், தன்னுடைய சொந்த ஆசாபாசங்களின் பிடியில் கட்டுண்டு கிடக்கக்கூடாது. குறிப்பாக, தம் புலன்களின் கட்டுப்பாட்டில் அவர் வந்துவிடக் கூடாது. அறிவைவிட மனோ இச்சை மிகையாகக்கூடிய வகையிலோ அதற்கு வழிகோலுவதாகவோ அவருடைய எந்தப் பண்பும் இருக்கக்கூடாது. புலன்
இச்சைகள் என்பன அறிவின் செயல்பாட்டையும் கண்ணோட்டத்தின் தெளிவையும் கெடுக்கக்
கூடியவை. அவை, மற்ற அனைத்தையும்விட மோசமானவை. சிந்தனைகளைச் சிதறடித்து, மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியவைதாம் புலன் இச்சைகள்.

மனித சமுதாயத்தின் தூணும் இந்த உலகுக்கெல்லாம் பேரரசருமான தாவீதின் (டேவிட்டின்) புனித பரம்பரையில் வந்து வாரிசானவர், மக்களின் நன்மையைக் கருதி தனது சொந்த விருப்பு வெறுப்புகளையெல்லாம் கட்டாயம் தியாகம் செய்தாக வேண்டும்.
குற்றமற்ற பூரணத் தன்மைக்கு உதாரணமாகவும், மக்களால் பின்பற்றத்தக்கவராகவும் நம்முடைய பேரரசர் இருக்க வேண்டும்.

_ சியோன் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்டது,
33ஆவது படித்தரம்.

(தொடரும்…)