கவிதை : வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர்

2022 கவிதைகள் மே 16-31 2022

(27.4.1852 – 28.4.1925)
(வாழ்த்துக் கவிதை – வெண்பாக்கள்)
தேவத்தூர் அ.காந்தி, ஒட்டன்சத்திரம்
“நல்மனித தர்மத்தை நாட்டிடவே சர்.பிட்டி.
நில்லாது போராடி நீடுழைத்தார்’’ – முல்லையே
என்றிந்தப் பாராட்டை ஏற்றமுடன் பிட்டிக்கு
அன்றுதந்தார் அய்யா அறி.
நல்நீதிக் கட்சியினை நாட்டிய மூவருக்குள்
வல்லவராய்ச் சர்.பிட்டி.வாழ்ந்திருந்தார் – மல்லிகையே
*நற்றலைமைச் சீர்பொறுப்பு நாடிவந்த காலத்தும்
பற்றின்றித் தான்மறுத்தார் பார்.
* முதலமைச்சர்
ஏற்றம்சேர் சர்.பிட்டி. என்னும் தியாகராயர்
மாற்றங்கள் கொண்டுவந்த மாமேதை – போற்றிடுவோம்
என்றுமவர் நன்நினைவை; எல்லாரும் தான்வாழ
நன்றுழைத்தார் செம்மல், நவில்.
ஈடில்லாச் செல்வந்தர் ஏற்றம்சேர் பிட்டிக்கு
நாடிவந்த பட்டங்கள் நல்மூன்று* – வாடிநின்ற
நல்ல பயிர்களுக்கு நன்மைதரும் வான்மழை போல்
எல்லார்க்கும் ஈந்தார் இயம்பு.
* 1909:ராவ்பகதூர்; 1919: திவான்பகதூர்; 1921: சர்
வெள்ளுடை நல்வேந்தர் வெற்றித் திருமகனார்
வள்ளலாய் வாழ்ந்திட்டார் வான்மதியே – கல்விசேர்
நல்ல சமூகநீதி* நாட்டினர்கள் பெற்றுயர்ந்து
வெல்கவே என்றார் விரைந்து.
* ஷிஷீநீவீணீறீ யிustவீநீமீ
நற்கல்விப் பேரொளியால் நாட்டில் அறியாமை
முற்றும் ஒழிக்க முனைந்தவள்ளல் – அற்புதமாய்க்
கல்லூரி பள்ளிகளைக் கண்டிட்ட சர்.பிட்டி.
வல்லமையை நாள்தோறும் வாழ்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *