திராவிடத்தை திக்கெட்டும் பரப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! வாழ்க! வாழ்க!

மார்ச் 1-15 2022

மஞ்சை வசந்தன்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மார்ச் ஒன்று. 69 வயது. ஆனாலும், அதற்குரிய அடையாளமே இல்லாமல் 25 வயது இளைஞரைப் போன்று ஓய்வின்றி உழைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

ஒன்பது மாத ஆட்சிக் காலத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் சாதனைகளே! மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், மாணவர்கள் நலன் காப்பதிலும், பெண்கள் முன்னேற்றம் பேணுவதிலும், தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும், சமூகநீதி காப்பதிலும், தேர்தல்களில் வெற்றி குவிப்பதிலும், திராவிடக் கொள்கைகளை உறுதியுடன் நிலைநிறுத்து-வதிலும், தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழர்கள் முன்னேற்றத்தில் முனைப்புக் காட்டுவதிலும், பெரியார், அண்ணா, கலைஞர் என தனது முன்னோடிகளின் இலக்குகளை அடைவதிலும் அயராது அக்கறை செலுத்தி உழைத்து வருகிறார். அவர்கள் மூவரையும் தன்னுள் உள்ளடக்கிய ஒட்டுமொத்த உருவாகிச் செயலாற்றுகிறார்.

ஒவ்வொரு அடியையும் நிதானமாக, நிலையாக, சரியாக எடுத்து வைக்கும் அவர், இந்திய நாட்டின் சிறந்த முதல்வர் என்னும் சிறப்பைப் பெற்றதோடு, பிற்படுத்தப்-பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததின் மூலம், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை நட்சத்திரமாகவும் உயர்ந்து நிற்கிறார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கியே தீருவேன் என்று செயல்படும் அவரை, இந்திய மக்கள் தங்கள் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டைத் தனித்துக் காட்டும் திராவிட சித்தாந்தம் (Dravidian Model) இந்தியா முழுமைக்கும் இந்துத்துவத்திற்கு சரியான மாற்றாக இருக்கும் என்கிற தொலைநோக்கு நுட்பத்துடன் அவர் தனது அடுத்தடுத்த செயல்திட்டங்களைத் தீட்டி, ஒவ்வொரு நாளும், தான் இந்தியாவிற்கான எதிர்காலத் தலைவர் என்பதை எல்லோருக்கும் உணர்த்தி வருகிறார்.

அவரைப் பற்றி குறைத்து மதிப்பிட்டவர்கள், குறைசொல்லிப் பேசியவர்கள், எதிர்த்தவர்கள், எதிரியாக நினைத்தவர்கள் என்று எல்லா தரப்பினரும், ஏற்கும் தலைவராய், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்து, ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறார்.

நேர்மையின் சின்னமாய், தூய்மையின் அடையாளமாய், வாய்மையின் வடிவமாய், நம்பிக்கை நாயகராய் தன்னை உறுதி செய்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசியல்வாதிகளின் முன்மாதிரியாய் (Role Model) விளங்குகிறார்.

மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில சுய ஆட்சி, மாநில தனித்தன்மை, ஆதிக்க, பாசிச சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடு என்று அனைத்து மனிதநேய இலக்குகளையும் ஒருங்கிணைந்து பெற்று ஒப்பற்ற தலைவராய் ஒளிர்கிறார்; உயர்ந்து நிற்கிறார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்,

“நாடாளுமன்றத் தேர்தல் (2019), சட்டமன்றத் தேர்தல் (2021) மற்றும் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தி.மு.க., தி.மு.க.  கூட்டணியினர் பெற்ற வெற்றிகளை மேலும் பெருக்கிய வண்ணம் – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு _ தி.மு.க.வின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்குப் பேராதரவு தந்து – எதிர்த்து நின்ற கட்சிகளுக்குப் படுதோல்வியையே ‘’பரிசாக’’ அளித்து, வரலாறு படைத்துள்ளனர் தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள்.

கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தைக்கூட, இடங்-களைக்கூட எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெறவில்லை.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவர்களைப் புறக்கணித்ததோடு, புறந்தள்ளியும், நல்ல தீர்ப்பைத் தந்துள்ளதன்மூலம் -9 மாத தி.மு.க. ஆட்சி பார் போற்றும் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி திகழுகிறது என்பதைப் பறையாற்றியுள்ளனர். இத்தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் ஊர்போற்றும் ஆட்சியின், நல்லாட்சி நாயகரின் மகுடத்தில் மேலும் பல வெற்றிகள் என்னும் ஜொலிக்கும் வைரக்கற்-களைப் பதித்து, திராவிடர் ஆட்சியின் மாட்சியின் பெருமையை உலகறியச் செய்யும் சான்றிதழ் வழங்கி, சரித்திரம் படைத்துள்ளனர்.

உள்ளாட்சி வெற்றி நாயகர்களே, உங்களுக்கு வாழ்த்துச் சொல்லும் இவ்வேளை-யில், இனிமேல் உங்கள் பொறுப்பையும், கடமையையும் சுமையாகக் கருதாமல், சுகமானதாக மாற்றி, தி.மு.க. ஆட்சிக்கு மேலும் கூடுதலாகப் பொலிவும், வலிமையும், நற் பெயரையும் சேர்க்கும் வண்ணம் குறையற்று நடந்துகொண்டு, மாசில்லாப் புகழுடன் கடமையாற்றுங்கள்.

அதன்மூலம் தலைமையின் பெருமையை தகத் தகாய ஒளிவீசச் செய்யுங்கள்! உங்கள் தலையாய கடமை அது!

இதுதான் நமது உரிமையுடன் கூடிய அன்பு வேண்டுகோள்!

எதிர்க்கட்சி நண்பர்களே, இனியாவது தமிழ்நாட்டு நலனில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பைத் தந்து, சறுக்கலைச் சரி செய்து கொள்ளுங்கள் – காவிக் கனவுகள் கலையட்டும்!

நம் முதலமைச்சர் எந்த எதிர்ப்பைப்பற்றியும் கவலைப்படாமல் எதிர்நீச்சலிலே வளர்ந்தவர். அந்த எதிர்நீச்சல்தான், இன்றைக்கு நம்முடைய முதலமைச்சருக்கு மிக முக்கியமாகப் பயன்படக்கூடிய அருமையான பாடம். அதை அவர்கள் முழுமையாகக் கற்றிருக்கிறார்கள்.

அதன் காரணமாகத்தான், இன்றைக்கு  எதிரிகள் என்ன பேசினாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், தன்னுடைய பணியை உறுதியாக, தெளிவாக, துணிவாகச் செய்து சரித் திர நாயகராக, சமூகநீதி நாயகராக தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக – ஒப்பற்றவராக இருக்கிறார். “இது ஒரு பாரம்பரியம்’’ என்று  கூறியுள்ளது-போல், முதல்வரின் மாண்பு, ஆளுமை, இலக்கு, செயல்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை மட்டுமல்ல; இந்தியாவையே புதியதொரு பரிமாணத்திற்கும், பரிணாமத்திற்கும் இட்டுச் செல்லும் ஆற்றலுடையவை.

அவருடைய பெருமைகளும், முயற்சிகளும் சிறந்தோங்க, அவர்தம் இலக்கை அடைய, அவர் மீதான நம்பிக்கை தழைக்க, நிலைக்க ஆசிரியர் அவர்கள் வலியுறுத்திக் கூறுவதுபோல், தி.மு.க. தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பல்வேறு நிலையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவரின் நோக்கத்திற்கு குந்தகமோ, களங்கமோ, தடையோ, சீர்குலைவோ ஏற்படாத வகையில் பொறுப்புடன், விழிப்புடன் ஓய்வு, உளைச்சளின்றிப் பணியாற்றிட வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்கு தங்கள் முழு ஆதரவும் தரத் தயாராக உள்ளார்கள்.

அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்துறைப் பணியாளர்கள் முதல்வரின் நம்பிக்கைக்கு உகந்த வகையில், அவரது உயரிய லட்சியங்களை எட்டும்படியாக, அர்ப்பணிப்பு உணர்வுடன், தூய்மையாக, நேர்மையாக, வாய்மையாக மக்கள் நலன் கருதிச் செயல்பட வேண்டியது கட்டாயக் கடமை.

யார் தவறு செய்தாலும் அதை முதலமைச்சர் ஏற்க மாட்டார். எனவே, முதலமைச்சரின் நல்லெண்ணத்திற்கு ஏற்ப அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, அனைத்து நிலையில் உள்ளவர்-களும் முதல்வரோடு முழு ஒத்துழைப்புடன், பொறுப்போடு, நேர்மையாகப் பணியாற்றி முதல்வரின் இலக்குகளை அடையப் பாடுபடுவதே அவரது பிறந்த நாளில் அவருக்கு வழங்கும் உண்மையான வாழ்த்து ஆகும்.

இந்தியாவின் நம்பிக்கை ஒளியாய் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நூறு வயதையும் கடந்து நலமுடன் வாழ மக்களோடு சேர்ந்து வாழ்த்துகிறோம்.

வாழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *