இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது! சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது! தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – […]

மேலும்....

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அநேகருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதால், அவசரப்பட்டு மிகவும் விபரீதக் கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும், “பழக்கம்”, “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் […]

மேலும்....

இந்து ராஜ்ய கனவை இந்தியா கூட்டணி தகர்க்க வேண்டும்!

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் 23-1-2024 தேதியிட்ட ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது! ‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன” என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கின்றன ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டமும். […]

மேலும்....

தலையங்கம் – எங்கும் அமைப்போம் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்!’’

  தஞ்சையிலும் திருச்சியிலும் (21, 22-1-2023) நாள்களில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல், திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் ஆகியவற்றிற்கு  குறுகிய கால அறிவிப்பானாலும்கூட ஏராளமான மாணவ, இளைஞரணித் தோழர்கள், திரண்டு வந்து, உற்சாகத்துடன் பங்கேற்றது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம். எதையும் எதிர்பாராமல் ‘மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கருதி’ உழைக்கும் கொள்கைச் செல்வங்களின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது, நம்மை ஒருவகை புத்தாக்கத்திற்காளாக்கியது! பெரியாரைச் ‘சுவாசிக்கும்’ இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் என்பதால், […]

மேலும்....