இறப்பிற்குப் பின்பும் உரையாட…- முனைவர் வா.நேரு

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் உயிரோடு அமர்ந்து இருப்பது போல் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ அமைப்பு இருக்கிறது. நாம் அவருக்கு எதிரே அமர்ந்து கையை ஆட்டிச் சொன்னால், அவரும் நாமும் உரையாடுவது போல இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் இதற்கு வழி வகுத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் வரும் பலரும் இப்படி […]

மேலும்....

நகர்நோக்கிய இடப்பெயர்வு நம் பார்வையில்!

-…- குமரன் தாஸ் -… விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியார் சொன்னார் என்பார்கள். உண்மைதான். இன்றளவும் இந்தியா ஓர் விவசாய நாடுதான். நமது மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய கோரிக்கையையும் போராட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பது வேதனையானது. அந்த விவசாயம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99.9% பார்ப்பனரல்லாத மக்களின் தொழிலாக இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் வறட்சி அல்லது […]

மேலும்....

இமையம் கதைகளில் கரையும் இதயம்! -… கி.தளபதிராஜ் …

‘கோவேறு கழுதைகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கொண்டாடும் மகத்தான ஓர் எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருப்பவர். அனுபவமும் புனைவுகளும் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு ஒன்றோடொன்று கரைந்து போயிருக்கும் அவரது எழுத்துகள் எதார்த்த வாழ்வை அப்படியே கண்முன் நிறுத்தும் காந்த சக்தி படைத்தவை. ஒன்பது நாவல்கள், எட்டு சிறுகதைகளை குறைந்த கால இடைவெளியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதைகளில் ‘அணையும் நெருப்பு’, ‘அய்யா’, […]

மேலும்....

ஈடி அலுவலர்கள் மோடியின் ஈட்டிக்காரர்களா ?

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கட்சிகளை உடைக்கவும், பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துப்போடவுமே பெரும்பாலும் புலனாய்வு மற்றும் நிதி நிர்வாகப் பயன்படுத்தி வந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தற்போது புதிய பயன்பாடும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க. திட்டம் மூலம் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாரதிய ஜனதா கட்சியாகும். அந்தக் கட்சிக்கு மட்டும் கடந்த 2017-18 முதல் 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6570 கோடி […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....