என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்.. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. இதையெல்லாம் தாண்டி, இன்னொன்று சொல்லுகிறார். இப்பொழுது மனிதனுடைய ஆயுட்காலம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பலப்பல காரணங்களுக்காக, 58, 60 வயதில் நம்முடைய ஓய்வு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் சொல்கிறார், ‘‘ஓய்வு, சலிப்பு எல்லாவற்றையும் தற்கொலை என்றே கருதுவேன்’’ என்கிறார். பெரிய வார்த்தை இது:- ஓய்வு, சலிப்பு எல்லாம் தற்கொலை என்பது. ஆனால், அந்தப் பெரிய வார்த்தைக்குப் பின்னால், ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்குமோ என்று உணர்ந்து பார்க்கவேண்டும். […]

மேலும்....

பகுத்தறிவைப் பரப்புங்கள்

தந்தை பெரியார் “நமது கேடுகளுக்கு எல்லாம் காரணம் மூடநம்பிக்கைகளும் முயற்சியின்மையுமே ஆகும். இதைப் போக்க ஒரே மருந்து மக்களை பகுத்தறிவாளர்களாக்குவதே. பகுத்தறிவைப் பரப்ப துணிவும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறனும் வேண்டும். எதிர்நீச்சல் பணி இது! எதிலும் பற்றற்றவராகவும், தன்னலமற்றவராகவும், உண்மையாளராகவும் நடந்து, இன்சொல்லால் கழகக் கொள்கைகளை விளக்கி மக்களை ஈர்க்க வேண்டும். கழக நூல்களை நன்கு படித்தறிந்து சிந்தித்து- பிறருக்கும் படித்துக்காட்டி விளக்குங்கள்! அறிவுக்கு முதலிடம் அளித்து ஆராய்பவரே பகுத்தறிவுவாதியாக முடியும்; குற்றமற்ற நல்லோருடன் பழகி பிரச்சாரப்பணியை […]

மேலும்....

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அநேகருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதால், அவசரப்பட்டு மிகவும் விபரீதக் கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும், “பழக்கம்”, “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் […]

மேலும்....

விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன். தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் தஞ்சையில் மகாத்மா சில பார்ப்பனரல்லாத கனவான்களிடம் பேசிய பிறகு, தான் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயமான பூசலைப்பற்றி முன்னையை விட அதிகமாகத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டு அதற்குமேல் வருணாசிரமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்:- அவ்வாறு பேசியிருப்பது, தேசியப் பார்ப்பனரல்லாதார் என்போர் பார்ப்பனரை விடுவதற்கும் தைரியமில்லாமல், பார்ப்பனரல்லாதாரை விடுவதற்கும் தைரியமில்லாமல் இரண்டுபேரையும் ஏமாற்ற நினைத்துக் கொண்டு, அங்கொருகால் இங்கொருகாலாக வைத்துக்கொண்டு இருப்பது போல், மகாத்மாவின் பிரசங்கமும் இரண்டு பேரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவே காணப்படுகிறது. அதில் […]

மேலும்....