உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவிலேயே – தாழ்த்தப்பட்டோருக்கான முதல் அமைச்சகத்தை பானகல் அரசர்தான் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

கோயில், பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பானகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத்துறையையே உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில்தான் ‘‘ஸ்டாப் செலக்ஷன் போர்டு’’ ஏற்படுத்தப்பட்டு உத்தியோக நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. அதற்குமுன், அந்தந்த இலாகா மூலமாகவே பார்ப்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது நமது அபிப்பிராயம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும், துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டியது அவசியமும் அவரசமுமான காரியமாகும்” என்று 1942லே கூறினார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பெண்களுக்காக உழைத்தவர்களில் ஈ.வெ.ரா.தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர். அந்த அளவிற்கு வேறு எவரும் சிந்தித்ததும் இல்லை. உழைத்ததும் இல்லை. இதை நன்குணர்ந்த பெண்கள், தங்களின் நன்றிப் பெருக்கால், 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள் சென்னை ஒற்றவாடைத் திரையரங்கில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டத்தை அவருக்குத் தீர்மானம் நிறைவேற்றி வழங்கினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....