காதல் திருமணங்கள ஊக்குவிப்போம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்: மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை  முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள்  வாழ வேண்டும். தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப் பட்டோர் – பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை […]

மேலும்....

உலகம் அழியப்போகுதா?

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதவாதிகள் கிளப்பும் பீதி மீண்டும் கிளப்பப் பட்டிருக்கிறது. 2000 ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்று 1990களில் இப்படித்தான் பீதி ஏற்படுத்தினார்கள். அந்த மூடநம்பிக்கை தகர்க்கப்பட்டு 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மீண்டும் இந்த டிசம்பர் 21ஆம் நாள் உலகம் அழிந்துவிடும் என்று கிளப்பிவிட்டுருக்கிறார்கள். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் மாயன் நாட்காட்டியாம். அந்த நாட்காட்டி அந்த நாளோடு முடிகிறதாம். எனவே, அதற்கு அடுத்த நாள் உலகம் இருக்காதாம். மாயன்கள் இப்போது […]

மேலும்....

ஜாதியை ஒழிக்க கை கோர்ப்போம்!

அறைகூவல் விடுத்த தருமபுரி மாநாடு!!

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமே  ஜாதிகள் ஒழிந்த சமூகநீதியில் கட்டப்பட்டது தான். தனது இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஜாதி இழிவைப் போக்கவே அவரது முழக்கம் ஓயாமல் ஒழித்தது.அந்தத் தலைவன் உழைத்த மண்ணில் அரசியல் வளர்க்க சிலர் ஜாதிவெறியைத் தூண்டும் அவலம் நிகழ்ந்துள் ளது. தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட அந்தத்தீயை அணைக்க பெரியார் தொடங்கிய  திராவிடர் கழகம் களம் இறங்கியது.

மேலும்....

கொள்கை விழா!

தந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியே. பிறந்தநாள் என்றாலே யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கியே இருந்த ஆசிரியர் 75 ஆவது பிறந்தநாளில் தான் தொண்டர்களின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டார்.

மேலும்....

தர்மபுரி

பாலன் பொறந்தமண்ணில்பழியொண்ணுபடிஞ்சிருச்சே! அப்பு ஒழச்சமண்ணில்அநியாயம்நடந்திருச்சே! சாதிவெறி பாம்பு வந்துசடக்குன்னுகொத்திருச்சே! சிறுகுஞ்சப் பருந்து வந்துதிடுக்குன்னுஎத்திருச்சே! கல்லூடு கட்டுறதுஒங்ககண்ணுக்குப்பொறுக்கலியோ! கல்லூரி செல்லுறதுஒங்ககருத்துக்குஒறுக்கலியோ! அகம் புறமாவாழ்ந்தஇனம்அடிபட்டுச்சாகுதே குறுந்தொகையபடிச்ச மனம்இடிபட்டுவேகுதே! எரிச்சவுக மூளையிலஎருக்குமுளச்சிருக்கோ! இடிச்சவுக கைகளிலஎலந்தகௌச்சிருக்கோ! எதுல ஒசத்தின்னுஎனக்கெடுத்துச்சொல்வீரோ! எதுத்தா பேசுறன்னுஎன்னையுந்தாகொல்வீரோ! அடங்கமறு காலத்துலஅடக்கி விடமுடியாது! அத்துமீறதுணிஞ்சுபுட்டாஅடிதடிக்குமுடிவேது! ஊரு திருந்தாமஉருப்படவேமுடியாது! சாதி ஒழிக்காமதமிழிருட்டுவிடியாது! – அறிவுமதி(நன்றி : குமுதம்)

மேலும்....