உலகம் அழியப்போகுதா?

டிசம்பர் 16-31

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதவாதிகள் கிளப்பும் பீதி மீண்டும் கிளப்பப் பட்டிருக்கிறது. 2000 ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்று 1990களில் இப்படித்தான் பீதி ஏற்படுத்தினார்கள். அந்த மூடநம்பிக்கை தகர்க்கப்பட்டு 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது மீண்டும் இந்த டிசம்பர் 21ஆம் நாள் உலகம் அழிந்துவிடும் என்று கிளப்பிவிட்டுருக்கிறார்கள். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் மாயன் நாட்காட்டியாம். அந்த நாட்காட்டி அந்த நாளோடு முடிகிறதாம். எனவே, அதற்கு அடுத்த நாள் உலகம் இருக்காதாம். மாயன்கள் இப்போது இல்லையல்லவா? அதனால் இந்தப் பீதியை வழமைபோல கிறித்துவ மதப் பிரச்சாரகள்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் ஏற்கெனவே பலமுறை இந்தப்

புளுகுக்கு அறிவியல் பூர்வ பதில் தந்துள்ளோம். கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு மாணவர் கருத்தரங்கில் அறிவியலாளர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களிடம் `விரைவில் உலகம் அழியும் என்பது உண்மையா? என்று ஒரு மாணவன் கேட்டான். சந்திரசேகரன் சுப்பிரமணியன், சந்திரயானைக் கண்டுபிடித்தார்; நோபல் பரிசு பெற்றார். அவர் ஆய்வின்படி, இந்த பூமியும், சூரியனும், 10 பில்லியன் ஆண்டுகள் வரை சுற்றிக் கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். ஏற்கனவே, 5 பில்லியன் ஆண்டுகள் சுற்றிவிட்டன. இன்னும், 5 பில்லியன் ஆண்டுகள் மீதம் இருப்பதால், இப்போதைக்கு கவலை வேண்டாம் என்று பதில் கூறியுள்ளார் அப்துல் கலாம். மக்களை அச்சத்திலேயே வைத்திருந்தால்தான் மதமும், கடவுளும் வாழும். அதில் ஒரு உத்தியே இந்தப் புளுகு.

அறியாமை தகர்ப்போம்; அடுத்த இதழில் சந்திப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *