கல்வெட்டு : சோறு சொல்லும் வரலாறு!

தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பனவாகும். எச்சோறு கிராம ஊழியர்களுக்கு இரவில் சோறு போடும் கடமை எச்சோறாகும். நெல் குத்துபவர்களுக்கு இரவில் சோறு இடும் கடமை, ‘எச்சோற்றுக் கூற்று நெல்’ என்றும், ‘எச்சோற்றுக் கூற்றரிசி’ என்றும் குறிப்பிடப்பட்டது. (சுப்பிரமணியன்: தி.நா. 2011:18) பொது ஊழியர்களுக்குப் பகலில் கொடுக்கும் சோறு (ஒரு வரி) […]

மேலும்....

கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்; வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்; நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும் தலைவர் இவரே! அறிஞர் அண்ணா கலைஞர் போன்றோர் கடமையாற்றிட முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்! பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்; பகுத்தறி வென்னும் பாதை காட்டி மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்; சுயமரி யாதை இயக்கத் தாலே நயமுறு […]

மேலும்....

அறிவியல் : வேற்றுக் கோள்களில் உயிரினங்களை உருவாக்குவது இனி சாத்தியம்!

சரவண இராசேந்திரன் எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்றுக் கோள்களுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழலில் இனப்பெருக்கம் செய்து உயிர்களை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலை ஆகும். இதுவரை பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட கோள்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் எந்தத் தட்பவெட்ப நிலையில் உள்ள கோள்களிலும் தகுந்த பாதுகாப்பு வசிப்பிடங்களில் வாழமுடியும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படிச் சென்று வாழும் சூழலில் அங்கு தாவரங்களோ அல்லது இதர உயிரினங்களோ மனிதர்களோ இனப்பெருக்கம் செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. […]

மேலும்....

அறிவியல்

பிரபஞ்ச ஆய்வில் புதிய தொலைநோக்கி தென் அமெரிக்காவிலிருக்கும் பிரெஞ்ச் கயானா மழைக் காடுகளிலிருந்து ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் இருந்து வரும் ஹப்பிள் தொலைநோக்கி 1990ஆம் ஆண்டு நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.  பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருக்கும் இந்தத் தொலைநோக்கி முப்பது ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தத் தொலைநோக்கி தந்த தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து மட்டும் இதுவரை 18,000க்கும் மேற்பட்ட […]

மேலும்....