அறிவியல் : வேற்றுக் கோள்களில் உயிரினங்களை உருவாக்குவது இனி சாத்தியம்!

சரவண இராசேந்திரன் எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்றுக் கோள்களுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழலில் இனப்பெருக்கம் செய்து உயிர்களை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலை ஆகும். இதுவரை பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட கோள்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் எந்தத் தட்பவெட்ப நிலையில் உள்ள கோள்களிலும் தகுந்த பாதுகாப்பு வசிப்பிடங்களில் வாழமுடியும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படிச் சென்று வாழும் சூழலில் அங்கு தாவரங்களோ அல்லது இதர உயிரினங்களோ மனிதர்களோ இனப்பெருக்கம் செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

இன்று இண்டு நாளிதழ் படிக்க நேர்ந்தது. மொத்த பொறியியல் விண்ணப்பத்தில் பாதி விண்ணப்பதாரர்கள் முதல் தலை முறையாக கல்லூரியில் காலடி வைக்கப்போகிறார்களாம்…. சொதந்திரம் வாங்கி 65 வருடத்திற்குப் பிறகும் இவ் அவலம் தொடர்கிறது… உழைக்கும் மக்களில் 80 %க்கு மேல் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சந்ததிகளின் நிலையிது… நீதிக்கட்சி போராட்டம்…. திராவிடர் கழக போராட்டம்…. அய்யா பெரியாரின் போராட்டம்… சமூக நீதிக்கான அமைப்புகளின் போராட்டத்திற்கு பிறகும்…. கிண்டல் செய்ய…. விமர்சன்ம் செய்ய… பெரியார் இருக்கிறார்… பலனை அனுபவித்தவர்கள் […]

மேலும்....

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க… – 5

கடவுள் படைப்புத் தொழிலை கைவிட்டு விட்டாரா? – மகிழ்நன் உலகில் வேறெந்த உயிரினங்களும் மதங்களின் பின் திரிவதில்லை; கோவில் கட்டி தன் உழைப்பை, நேரத்தை வீணடிப்பதில்லை. அறிவியல் வளரா காலகட்டத்தில் மனிதனுடைய பகுத்தறிவு ஏற்படுத்திய சந்தேகங்கள் அவனை பல்வேறு பொருத்தமற்ற காரணங்களோடு திருப்தியடையச் செய்தது. எல்லா குழந்தைகளையும் போல என் சிறுவயதில் வானத்திலிருந்து எப்படி  மழை பெய்கிறது என்ற கேள்வி பல முறை வந்திருக்கிறது. தந்தையும், தாயும் அதிகம் படித்தவர்கள் இல்லை, அவர்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்டால், […]

மேலும்....

புதுப்பாக்கள்

“நான் சரியா யோசிக்கிறேனா?” எரியூட்டப் படுகின்றன – இன்னும்எரியாத மனிதக் குப்பைகள் சர்வாதிகாரச் சந்தைகளில்விற்பனையாகாமல் – ஏராளமானஎலும்புக்கூடுகள் அடுக்கிய படியே அப்பாவிகளின் முதுகுகளைகூர்ந்து கவனித்தபடியேகாத்து இருக்கின்றனகார்ப்பரேட் கழுகுகள் வதைமுகாம்களில் – தொலைத்தமுகவரி தேடும் எறும்புகளாய்மிதிபடுகிறது மக்களாட்சி சட்டத்தை சட்டைசெய்யும்சவுக்கு மரமாக –அதிகார முனைகள் கனன்றுபதவி பாதாளத்தை நிரப்புகிறது. வர்த்தக மூடர்களின் கண்களில் – கல்வியேகல்லாப் பெட்டி.கருகிய புத்தகத்தின்கதறலுக்கு இன்னும் – நீதிநெருப்பு வெளியே தெரியாமல்புகைகிறது. கும்பகோணக் காற்றில்எரிந்து போன தாலாட்டுப் பாடல்கள்கருகிய வாசமுடன் கேட்கிறது. மடாதிபதிகளாய் ஆட்சியாளர்கள்எடுபிடிகளாய் […]

மேலும்....

முற்றம்

ஆவணப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் ஆசியுடன் நடந்த இந்துத்துவ கலவரத்தின் விளைவுகளை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. திவீஸீணீறீ ஷிஷீறீவீஷீஸீ என்ற ஆவணப்படம். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் ஓர் அரிய முயற்சி. அதாவது, கலவரக்காரர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், பொதுவான மக்களையும், ஊடகவியலாளர்கள் என்று எல்லா தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராகேஷ் சர்மா. இந்துத்துவ வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட […]

மேலும்....