வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்

ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் 1993 ஜூன் 14 முதல் 25 வரை மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு நடைபெற்றது. இந்த வகையில் இதுவரை இராத பெரிய அளவில் நடைபெற்ற அம்மாநாட்டில் 171 அரசுகளின் பிரதிநிதிகளும், ஏராளமான தேசிய, சர்வதேசிய அமைப்புகளையும், அரசுசாரா நிறுவனங்களையும் சார்ந்தவர்களாக ஏறத்தாழ ஏழாயிரம்பேர் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கங்களில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்கப்பட்ட 1948இலிருந்து மனித உரிமைகள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வும் மதிப்பீடும், வளர்ச்சிக்கும் பொருளாதார, சமூக, […]

மேலும்....

அறிவியல் : தண்ணீரால் வாகனம் ஓட்டி அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

வேலூர் வி.அய்.டி. பல்கலைக்கழகம் அறிவியல் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ‘நாளைய விஞ்ஞானி’ என்னும் கண்காட்சியை நடத்தியது. இதில் பெண்ணாத்தூர் அரசுப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனம் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணா-துரை மாணவரை வெகுவாகப் பாராட்டினார். வாகனத்தை ஆய்வு செய்த […]

மேலும்....

அறிவியல் : 5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்

முனைவர் வா.நேரு இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் முழுமையாக டிஜிட்டல் உலகத்தை ஆக்கிரமிக்கப் போகும் இரு நபர்களாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி உருவாகி இருக்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் _ஜியோ, வோடஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க் எல்லாம் இந்த ஏலத்தில் பங்கெடுத்து பணம் கட்டியிருக்கிறார்கள். இன்னும் இந்த சேவையையே தொடங்காத அதானி கம்பெனிக்கு 5ஜி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக தொலைதொடர்பு […]

மேலும்....

அறிவியல் : அறிவுத் தெளிவை உண்டாக்கும் அறிவியல்

முனைவர் வா.நேரு வானிலுள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், கோள்கள் பற்றி பலப்பல மூடக்கதைகளை, கருத்துகளை மதவாதிகள் பரப்பினர். அதிலிருந்து ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை முளைத்தது. ஆனால், மதவாதிகளுக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த அறிவியல் அறிஞர் கலிலியோ. கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி உலகத்தின் பார்வையை மாற்றி வானத்தை, விண்ணை ஆராய்வதற்கான அடித்தளத்தைக் கொடுத்தது. கலிலியோ காலம் தொடங்கி இன்றுவரை அறிவியல் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகளை வடிவமைத்துக்கொண்டே இருக்கின்றனர். ‘கடவுள் செத்துப்போனார்’ என்று சொல்லும் அளவிற்கு கடவுள் பற்றிய கருத்துகளைப் போட்டு […]

மேலும்....

அறிவியல் : வேற்றுக் கோள்களில் உயிரினங்களை உருவாக்குவது இனி சாத்தியம்!

சரவண இராசேந்திரன் எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்றுக் கோள்களுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழலில் இனப்பெருக்கம் செய்து உயிர்களை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலை ஆகும். இதுவரை பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட கோள்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் எந்தத் தட்பவெட்ப நிலையில் உள்ள கோள்களிலும் தகுந்த பாதுகாப்பு வசிப்பிடங்களில் வாழமுடியும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படிச் சென்று வாழும் சூழலில் அங்கு தாவரங்களோ அல்லது இதர உயிரினங்களோ மனிதர்களோ இனப்பெருக்கம் செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. […]

மேலும்....