மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…- மருத்துவர் இரா. கவுதமன்

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம். பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு […]

மேலும்....

ஆளுமையும் தியாகமுமே அன்னை மணியம்மையார் – பவளசங்கரி திருநாவுக்கரசு

பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறிமுறைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால், அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்! சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப்படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக, திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் ஜாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் […]

மேலும்....

நாசர் நமக்களித்த பேட்டி…

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அண்மையில் மதவெறியர்களால் தாக்கப்பட்ட நாசர் நமக்களித்த பேட்டியில், “ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’’ என்ற அமைப்பு மாணவர்களின் கருத்துப் பரிமாற்றக் களமாகப் பயன்பட்டு வருகிறது. அதில் எல்லாதவிதமான கருத்துகளும் மனந்திறந்து விவாதிக்கப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆதிக்கவாதிகளின் செயல் திட்டங்கள்; அவர்களுக்குக் கருவியாகப் பயன்படும் மதம், கடவுள், சாஸ்திரங்கள், ஜாதி இவற்றைப்பற்றிய விவாதங்கள் சிந்தனைக் கிளர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி, தன்னம்பிக்கை, தளராத உறுதி, சமத்துவம், சமூகநீதி, மனித உரிமை போன்றவற்றில் பிடிப்பை உருவாக்க […]

மேலும்....

ஹெச்.அய்.வி. பெற்றோரின் குழந்தைகளுக்கு ஒளியேற்றும் நூரி! – வை.கலையரசன்

மனிதம் மரத்துப்போய், திருநங்கைஎன்றாலே ஒருவித வெறுப்புணர்வுடன் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையில், மேலும் ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றால் இந்த சமூகப் புறக்கணிப்புகளை நினைக்கவும் வேண்டுமா? அப்படியான ஒருவர்தான் நூரி சலீம். ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தான் நடத்தி வரும் இல்லத்தில் தங்க வைத்துப் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார். இந்தியாவில் முதன்முதலாக ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவர் கண்டறிந்த மூன்றாவது ஹெச்.அய்.வி தொற்று […]

மேலும்....

இணையதளத்தில் செக்ஸ்டார்சன் காவல்துறை எச்சரிக்கை! – சரவணா இராஜேந்திரன்

விழிப்புணர்வு செக்ஸ்டார்சன்..!? அது என்னது… செக்ஸ்டார்சன்? சமூகவலைதளத்தில் பகிரப்படும் படங்களை ஆபாசமாகச் சித்திரித்து அல்லது மோசமான வார்த்தைகளைப் பகிர்ந்து, ஆபாசப் படங்கள் எடுக்க அழைப்பது, இணையவழியாகவே பாலியல் செயல்களுக்கு வலியுறுத்துவது செக்ஸ்டார்சன் என்று கூறப்படுகிறது. இதுமாதிரியான மிரட்டலுக்குப் பலர் பலியாகி வருவதை அடுத்து அண்மையில் புரூக்கிங்க்ஸ் என்ற நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது.இதற்கு இளம் வயதுப் பெண்கள் மட்டுமின்றி வயது முதிர்ந்த பெண்களும் பலியாவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல […]

மேலும்....