பிறப்பொக்கும் – பாலமுருகன்

ஓம் நம சிவாய என்று தொடங்கி தஞ்சை பெரிய கோயிலின் அத்தனை அதிசயங்களையும் ஒன்று விடாமல் புட்டுப் புட்டு வைத்தான் சிவகுமாரன். தமிழகத்தின் ஆகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவன். மேடையில் சிங்கம் போலக் கர்சித்தான். அவன் பேச்சின் ஒவ்வொரு முடிவிலும் ஆச்சர்யமான தகவல்களும், அதற்கு கைதட்டல்களும் வந்து கொண்டே இருந்தன . அவன் வெற்றுப் புகழ் பாடவில்லை. சமூக ஊடகங்களின், கட்டுக்கதைகளைப் பேசவில்லை, அவன் பேசியது யாவும், வரலாற்றுத் தகவல்கள். “நீங்கள் நினைப்பது போல தஞ்சைக் கோபுரம்மேல் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (117) பசு வதையும் வேதப் பண்பாடும் – நேயன்

வேத காலத்தில், பசு வதை’’ இருந்ததா? வேதப் பண்பாட்டில், பசு புனித மிருகமாகக் கருதப்பட்டதா? பசு இறைச்சி உட்கொள்ளப்பட்டதா? இவ்விஷயங்கள், இன்று பெரும் சர்ச்சை-யாகவே மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், வேத காலத்தில் பசு உண்ணப்பட்டது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள், இரண்டு வகையானவை. ஒன்று, ‘கோகன’ எனும் பதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாராநாத் என்பவர், ‘பசுவைக் கொல்பவர்’ என […]

மேலும்....

முதல்வரை வாழ்த்தி மகிழ்வோமே! – முனைவர் கடவூர் மணிமாறன்

மாநில உரிமைகள் காப்பாற்ற – உயர் மனித நேயமும் தழைத்தோங்க நானிலம் வியக்கக் களம்நிற்பார் – என்றும் நமது முதல்வர் தளபதியார்! சட்டம் ஒழுங்கு சரியாக – யார்க்கும் சமூக நீதி கிடைத்திடவே திட்டம் பலவும் நிறைவேற்றி – வளம் திகழ்ந்திட முதல்வர் உழைக்கின்றார்! பெரியார் அண்ணா கலைஞர்வழி – நாளும் பெருமித நடையும் போடுபவர்! நரியார் கொட்டம் ஒடுங்கிடவே – வேண்டும் நற்பணி தேர்ந்து நாடுபவர்! கூட்டாட் சிக்கே உலைவைக்கும் – நச்சுக் கொள்கை உடையோர் […]

மேலும்....

பெண்களும் பேறுகாலமும்

ஆரிய கலாச்சாரத்தின் உச்சநிலை சீர்கேடு குழந்தைத் திருமணம். இரண்டு வயதில், அய்ந்து முதல் 10 வயதில், 15 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வது அவர்களின் கலாச்சாரம். அதை இக்காலத்திலும் அவர்கள் தொடர்வதும், நியாயப்படுத்துவதும் மனித எதிர்செயல் ஆகும். தமிழர் வாழ்வில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் காதலித்து மாலை மாற்றி மணம் முடித்துக்கொள்வது வழக்கம். அதில் அவர்கள் விருப்பமே முதன்மையானது. மற்றவர்கள் தலையிடுவதில்லை. ஜாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் இல்லை. ஆனால், ஆரியர் அயல்நாட்டிலிருந்து […]

மேலும்....

நடிகர் மயில்சாமி – பெரியாரின் மாணவரா? வி.சி.வில்வம்

நடிகர் மயில்சாமி மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. மறைந்த பிறகுதான் சிலரின் சிறப்புகள் பற்றி வெளியில் தெரியவரும். அந்த வகையில் மயில்சாமி அவர்கள் சிறந்த இன உணர்வாளர், கல்விக்காக நிறைய உதவி செய்தவர், மொத்தத்தில் மனிதாபிமானம் மிக்க மனிதர் என்பதை பலரும் தத்தம் பதிவுகளில் வெளிப்படுத்தி உள்ளனர். திரைத்துறையில் இருப்பவரும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்-பாளருமான கரு.பழனியப்பன் அவர்கள் தம் இரங்கலில் பல தகவல்களையும் குறிப்பிட்டு, இறுதியில் மயில்சாமி ஓர் பெரியாரின் மாணவன் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குச் சிலர், […]

மேலும்....