என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்…. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

2024 ஏப்ரல் 16-30, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

இந்தக் காணொலி மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு காலத்தில் எது ஒன்று சொன்னாலும், இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லை என்றார்கள். அப்படி என்றால், ராக்கெட் சைன்ஸ் என்பது மிகவும் கடினம் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள்.

நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா – பந்தயக் குதிரைகளாக இப்பொழுது நிலவிற்குப் போவதும், செவ்வாய்க் கோளுக்குப் போவதும் உலக நாடுகளுடைய இளைஞர்களுக்கு இணையாக, நம் நாட்டு இளைஞர்களும் போகிறார்கள் என்று.

அடுத்து வரக்கூடிய தமிழ் இளைஞன் – இந்தப் பந்தயக் குதிரையை முந்தவேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கூடத்தில், படிக்கும்போதே விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவார்கள். இதையெல்லாம் இஸ்ரோ செய்யப்போவதில்லை. பள்ளிக்கூட மாணவர்கள் செய்யப் போகிறார்கள்.

ஆண்களும், பெண்களுமான பள்ளிக்கூட மாணவர்கள் 50 சதவிகிதம், 50 சதவிகிதம் வைத்துக்கொண்டு, இதை உருவாக்கி இருக்கிறோம்.
முதலில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை போவது போன்று, மகாபலிபுரம் பக்கம் 150 சாட்டிலைட்டை 5 ஆயிரம் மாணவர்கள் செய்து 19 பிப்ரவரி, 2023இல் அனுப்பினோம்.
அடுத்தது, கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரம் போய்விட்டு, மீண்டும் அது பத்திரமாகக் கீழே வரும்.

நம்முடைய பள்ளிக்கூட குழந்தைகள் செய்து, நாளைக்கான பந்தயக் குதிரைகளாக அவர்கள் வருவதற்கான வாய்ப்பை இன்றைக்கு நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
நிலவுக்கான செயற்கைக்கோளைச் செய்துவிட்டேன்; செவ்வாய் கிரகத்திற்கான செயற்கைக்கோளைச் செய்துவிட்டேன் என்று ஓய்வாக அமர்ந்து கொள்ளாமல், அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து மாணவர்களுடன் மாணவனாய் செய்யும்பொழுது, இன்னும் இன்னும் சிறப்பாக வருகிறது என்பதை நான் சொல்ல முயற்சி செய்கிறேன்.
பெரியாரின் ‘இனிவரும் உலகம்‘ புத்தகத்தை நிறைய பேர் படித்திருப்பீர்கள்.

அதனுடைய சாராம்
சம் என்ன சொல்லுகிறது?
‘‘காகிதப் பணம் இருக்
காது’’ என்று பெரியார்
சொல்லியிருக்கிறார் அல்லவா!.
கிட்டத்தட்ட அந்த நிலைதான் இப்பொழுது.

அதேபோன்று ‘‘சட்டைப் பையில் தொலைபேசி’’ – கிட்டத்தட்ட எல்லோருடைய சட்டைப் பையிலும் வந்துவிட்டது.
அதேபோன்று ‘‘உடலுழைப்புக் குறையும்’’ கிட்டத்தட்ட வந்துவிட்டது.

‘‘ஆண் – பெண் பேதமிருக்காது.’’
ஆண் – பெண் பேதமிருக்காது என்பதில்
யாருமே சொல்லாத ஒன்றை, சொல்லியிருக்கிறார். எவ்வளவு முன்னேறினாலும் ஆண்-பெண்ணிடம் ஒரு பேதம் இருக்கத்தான் செய்கிறது. அதையும்கூட மாற்ற முடியுமா? என்று கேட்கிறார்.
தொழில் முறையில் எல்லாவற்றையும் சரியாகக் கொண்டு வந்துவிடலாம். படிப்பில் கொண்டு வந்துவிடலாம். சமையல்கூட பாதிப் பாதி செய்துகொள்ளலாம். ஆனால், பெண்தான் குழந்தையை வளர்க்கவேண்டும்; 10 மாதம் பெண் வயிற்றில்தான் குழந்தை வளரவேண்டும் என்று இருக்கிறது அல்லவா! அதையும்கூட மாற்ற முடியுமா? என்ற ஒரு வித்தியாசமான சிந்தனையை அவர் கொண்டுவர முயற்சி செய்கிறார்.

ஏனென்றால், மற்ற உயிர்களில் நடக்கும்பொழுது, இங்கே ஏன் நடக்கக்கூடாது என்கிற கேள்வியை உருவாக்குகிறார்.
அதேபோன்று, மக்கள்தொகை குறையும். எதிர்காலத்தில் குறையும் என்று சொன்னார். கிட்டத்தட்ட அந்த நிலை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் அந்த நிலை இல்லாமல் இருக்கலாம். அய்ரோப்பாவிலும், சில நாடுகளிலும் அந்த நிலைதான்.
அடுத்து, பெரியார் சொன்னது, ‘‘மனித ஆயுள் கூடும்.’’

சிங்கப்பூரில், 1950ஆம் ஆண்டுகளில், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 50 வயதாக இருந்தது. இப்பொழுது 84 வயதாக இருக்கிறது.
அதேபோன்று, இந்தியாவில் 1950ஆம் ஆண்டுகளில் 35 ஆக இருந்தது; இப்பொழுது 70 வயதாக ஆகியிருக்கிறது.
இப்பொழுது ஆயுட்காலம் அதிகமாகும் என்பது கிட்டதட்ட அதேபோன்று வந்து கொண்டிருக்கின்றது.
அதேபோன்று, ‘‘பெட்ரோல் பயன்பாடு இருக்காது’’ என்றார். பல இடங்களில் பேட்டரி வண்டிகள் வந்துவிட்டன.
‘‘தனி மனித சமுதாய ஒழுக்கம் பெருகும்’’ என்றார்.
இந்தியாவில் சொல்ல முடியுமா என்று தெரிய வில்லை. சிங்கப்பூரைக் கண்டிப்பாகச் சொல்லலாம்.
தனிமனித சமுதாய ஒழுக்கம் பெருகியிருக்கிறது.

இப்படி எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது, கூட்டிக் கழித்துப் பார்க்கும்பொழுது, ‘‘இனிவரும் உலகம்’’ சிறப்பாக இருக்கும் என்பதை பெரியாரின் பார்வையாக நான் பார்க்கிறேன்.
சிறப்பாக இருக்கும் என்றால்?
ஒரு காலத்தில் சொர்க்கம் எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ, அதை நோக்கி மனிதன் போய்க் கொண்டிருக்கின்றானோ என்கிற எண்ணம் பிறக்கிறது. ‘‘இனிவரும் உலகம்’’ என்ற கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் இப்படி சொல்லியிருக்கிறார் என்பதாய் நான் பார்க்கிறேன்.
அவர் சொன்ன, ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொன்றாக உண்மையாகிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு இல்லாவிட்டாலும், அதை அப்படியே எடுத்துக்கொண்டே போனால், ‘‘சொர்க்கம்’’ என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்ததை, பூமியில் கொண்டு வந்துவிட முடியும் என்கிற நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகத் தோன்றும்.
ஆனால், உலகம் நடப்பு அப்படி இருக்கிறதா?

எதிர்காலம் பற்றி வேறு கணிப்புகள் என்ன சொல்லுகின்றன?

வெப்பமயமாகும் உலகு

அதேபோன்று இன்றைக்குத் தூங்கி, நாளைக்கு எழும்போது எந்த நாடு எந்த நாட்டுடன் சண்டை போடும் என நமக்குத் தெரியாது.
அதுமாதிரியான ஒரு நிலையும் உருவாகி உள்ளது. இந்தப் போர்கள் எல்லாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குறியும் உருவாகிறது இப்பொழுது.
பெரியாரின் ‘‘இனிவரும் உலகம்’’ என்பதில் சொன்னவற்றையெல்லாம் ஒரு பக்கம் நான் பட்டியலிட்டுப் பார்த்தால், உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம் அச்சுறுத்தும் எதிர்காலம் என்பதைப் பார்க்கும்பொழுது அந்தப் பயமும் நமக்கு இருக்கிறது.
இரண்டையும் பார்க்கும்பொழுது, ஒரு பக்கம் முன்னேறிப் போகலாம். ஆனால், மற்றோரிடத்தில் பழுதுபட்டு விழுந்துவிடுவோமோ என்கிற பயமும் இருக்கிறது.
எதிர்காலம் பற்றிய புதிருக்குப் பதிலென்ன? இதுவரை நாம் என்னென்ன பேசிக்கொண்டோமோ, அவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் ஒரு விடை வரலாமோ என்பதைப் பார்க்கப் போகிறோம்.

ஏனென்றால், பெரியார் சொன்னார் அல்லவா – ‘‘பல சாத்திரங்கள், எதை வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்; உன் புத்தியைக் கொண்டு புதிதாகச் சிந்தி!’’ என்று. அதுபோன்று நாம் சிந்திக்க முயற்சி செய்வோம்.
இதுவரைக்கும் நான் சொன்னதையெல்லாம் கூட்டிக் கழித்து, மொத்தப் பட்டியலையும் சேர்த்து, ஏதாவது செய்ய முடியுமா? என்று நாம் முயற்சி செய்வோம்.
அவர் என்ன சொல்கிறார் என்றால்,

‘‘என்ன கஷ்டப்பட்டாவது, மறு உலகத்தைத் தயவு செய்து மறந்துவிட்டு, இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்’’ என்கிறார்.
மிகமிகத் தேவையானது.

இன்றைக்கு அப்படிச் செய்யவில்லை என்றால், ஒரு பக்கத்தில் பெரியாரின் ‘‘இனிவரும் உலகமாய்’’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம் வெப்பமயமாதல், போர்கள் என்று வீழ்ந்து கொண்டிருக்கிறது உலகம்.

இவை இரண்டும் சேர்ந்து, பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடலாம்.

கிட்டத்தட்ட உலகம் நன்றாக வருவது போன்று இருக்கிறது; ஆனால், அப்படியே அது கைநழுவிப் போய்விடும், அடுத்த தலைமுறை அதை இழந்துவிடும் என்கிற பயமும் இருக்கிறது.
இப்படி இல்லாமல் இருக்கவேண்டும் என்றால், கண்டிப்பாக நாம் அதை நோக்கிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்கிறார்.
இந்தச் சிந்தனைதான் அறிவியல். இதுதான் பெரியார் சொன்ன அறிவியல். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால், அந்த அந்தக் காலத்திற்கு என்ன வேண்டுமோ, அந்த நிமிடத்திற்கு என்ன வேண்டுமோ,
அதையும் நாளைக்குத் தேவையானதையும் பொருத்தி வைத்து ஒன்று செய்யப் போகிறோம் அல்லவா – அதுதான் உண்மையான அறிவியல் தொழில்நுட்பம்.
அதை நோக்கிப் போகும்பொழுது, விண்வெளித் துறையில்கூட நாங்கள் விண்ணில் செய்வதைவிட, மண்ணில் என்ன செய்யமுடியும்? என்பதாகப் பார்க்கிறேன்.
இப்பொழுது இதுவரை சொன்னவற்றை கருத்தில் கொண்டு பார்த்தீர்களேயானால், பூமி இருக்கிறது; பூமியைச் சுற்றி நாம் செயற்கைக்கோள்களை அனுப்பினோம். நிலவிற்கு அனுப்பினோம்; நிலவில் நீர் கண்டுபிடித்தோம். செவ்வாய்க்கும் அனுப்பினோம்.

இப்பொழுது இதைக் கூட்டிக் கழித்துவிட்டு, இன்னொரு பக்கம் இங்கே இருக்கக்கூடிய இந்த உலகத்தில் அச்சுறுத்தல் இருக்கிறது. அதிலிருந்து நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று பார்க்கும்பொழுது, கஷ்டப்பட்டாவது மறுஉலகத்தை மறந்துவிட்டு, இந்த உலகத்திற்கு வாருங்கள் என்கிறார் அல்லவா பெரியார்.
அதை மனதில் கொண்டு இப்பொழுது இங்கே பார்த்தீர்களேயானால், சர்வதேச விண்வெளி மய்யம் இருக்கிறது. இன்னும் 4, 5 ஆண்டுகளில் அதனுடைய ஆயுட்காலம் முடியலாம்.
திரும்ப அதுமாதிரி வேறு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சி செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம், 10, 20 ஆண்டுகளில் பூமி எப்படி இருக்கும்? என்கிற ஒரு கேள்விக் குறி இருக்கிறது.

இப்பொழுது விண்வெளி அறிவியல், விண்ணை நோக்கிப் போவதா? அல்லது பூமியை நோக்கிப் பார்ப்பதா ? என்று இருக்கிறது.
ஆக, விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளை விட்டுவிட்டால், விஞ்ஞானத்தில் மேலே போக முடியாது.
பூமியை விட்டுவிட்டால், விஞ்ஞானத்தில் மேலே போய்விடலாம்; ஆனால், இந்த உலகமே சரியாக இருக்காது.
ஆகவே, இரண்டையும் எப்படி சரியாக முன்னேற்றுவது அல்லது காப்பாற்றுவது?

தொடரும்….