வரலாற்றுச் சுவடு… : “ஏம்மா… உன் பேரு என்ன காவிரியா?’’

கலைஞர் குறித்து ஆசிரியர் வழங்கும் நினைவுக் குறிப்புகள்! திராவிட இயக்கத்தில் பாலபாடம் பயின்றவர் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி! தொடக்க காலங்களில் தோழர்களோடு கிராமங்கள்தோறும் சைக்கிளில் பயணம் செய்து கழகப் பிரசாரப் பணியாற்றியவர்! “கலைஞருக்கும் எனக்குமான உறவு என்பது 75 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிறுவயது மாணவப் பருவத்திலிருந்தே தொடங்கியது! 1.-5.-1945இ-ல், “தென்மண்டல திராவிட மாணவர்கள் மாநாட்டை’’ திருவாரூரில் மாணவராக இருந்த கலைஞர்தான் தலைமை-யேற்று நடத்தினார். அப்போது 12 வயது மாணவனான எனக்கு ‘போர்க்களம் நோக்கி’ என்ற […]

மேலும்....

ஆய்வு : பிறப்பால் பிராமணன் என்பதை மறுக்கும் பூணூல் சடங்கு!

சிகரம் ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழாவும் குறிப்பிடத்தக்க வொன்று. பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச் சரியத்திற்குத் தொடர்புடையது இது. திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமை-யாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன். அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திருமணம் பண்ணிக் கொள்ளும் வரையிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்! : அணிதிரட்டிப் போராடுவோம்!

  கே: ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்க இடம் அளித்தல், விடுதி வளாக மரணங்கள், பாலியல் முறைகேடு என்று பல்வேறு கடுங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்துவது தானே சரியாக இருக்கும்? – பா.சண்முகசுந்தரம், வேளச்சேரி ப: சட்டத்தில் அரசு, பள்ளிகளை ஏற்று நடத்த இடம் உண்டு. நடைமுறையில், இப்போதுள்ள நிதிநிலை நெருக்கடியில் தனியார் பள்ளிகளை பெரிய அளவில் நடத்த இயலுமா என்பது முழுதாய்ந்து மேற்கொள்ள வேண்டிய முடிவு! _ நீதிமன்றங்களையும் நீங்கள் மறந்து-விடலாமா? […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (106)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் இயல்பான நிலையில் மகப்பேறு நாள், பெண்கள் கருவுற்ற 280 நாள்களில் வரும். மாதவிலக்கம் நின்ற நாளிலிருந்து இந்நாள்கள் கணக்கிடப்படும். 15 நாள்கள் முன்னோ, அல்லது பின்போ மகப்பேறு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம். அதனால் மூன்றாம் மூன்று மாதப் பருவத்தின் கடைசிப் பகுதிகளில் மகளிர் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு. பெண்கள் அதை நினைத்து மனத் தளர்ச்சியோ (Depression), பயமோ (Fear) கொள்ளத் தேவையில்லை. மருத்துவர்களும் மருத்துவ […]

மேலும்....

சிறுகதை : உன்னால் முடியும்!

ஆறு. கலைச் செல்வன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் முதுகலைப் பாடங்களுக்கான தேர்வுகள் தொடங்கிவிட்டன. முதல்நாள் தேர்வெழுத மாணவ மாணவிகள் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் வந்து குவிந்தனர். அறிவிப்புப் பலகையில் தாங்கள் தேர்வெழுத உட்கார வேண்டிய அறை எண்ணைக் கண்டு பிடித்து அவர்கள் தங்களது அறைகளை நோக்கி விரைந்தனர். தேர்வுகள் தொடங்க இன்னும் பத்து மணித்துளிகள் இருந்தது. மதிவேந்தன் சற்று தயங்கியபடியே தேர்வறைக்குள் நுழைந்தார். அவர் தேர்வறைக்குள் நுழைந்ததும் அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்த மாணவ மாணவிகள் […]

மேலும்....