தகவல் துளி

ஏப்ரல் 16-30

சிக்கனத்தின் சிகரம்

கழக அன்பர்கள் பணம் வசூலித்து, பெரியாருக்கு ஒரு வேன் வாங்கித் தந்து இனி காரிலே செல்லும்படி வேண்டினர். ஆனால், வழக்கம்போல காரிலேயே பயணித்தார்.  தோழர்கள், கார் இருக்க வேனில் ஏன் சிரமப்படவேண்டும் என்று கேட்டனர்.  அதற்குப் பெரியார் சொன்னது:  விபரம்  தெரியாமப் பேசாதீங்க!  வேன் எவ்வளவு எண்ணெய் குடிக்குது தெரியுமா? பொதுக்கூட்டங்களில் கழுத்தில் விழும் மாலைகளைத் தூக்கி எறிய மாட்டார்.  அதில் சுற்றியிருக்கும் நூலை, கண்டா சுற்றி வேறு எதற்காவது பயன்படுத்துவார் சிக்கனத்தின் சிகரம்!

தகவல் துளிகள் தொகுப்பு :
– சந்தனத்தேவன்


 

இன்று போய் நாளை வா!

இராமாயணத்தில்  இன்று போய் நாளை வா!  என்று ராமன் சொன்னதை, தர்ம சிந்தனை என்கின்றனர்.  அது தவறு.  யுத்தகளத்தில் இரண்டு பேருமே நிராயுதபாணி.  கத்தியும் இல்லை கம்பும் இல்லை, தனி ஆட்கள்.  மீதி மல்யுத்தமே மிச்சம்.  இராவணன் பலே ஆசாமி.  அவன் முன்னே ராமன் எலிக்குஞ்சு.  அதனால் தோற்றுவிடுவோமோ எனப் பயந்து சொன்ன சொல்தான் இன்று போய் நாளை வா!


அவர் நம்மவர்

அண்ணா நோயுற்று மரணப் படுக்கையில் இருந்த போது, கிருபானந்த வாரியார் ஒரு கதாகாலட்சேபக் கூட்டத்தில் நம்ம கில்லருக்கு (எமன்) முன்னாடி இந்த மில்லர் (டாக்டர்) செஞ்ச வைத்தியம் எடுபடலே என நையாண்டி செய்தார். கழகத் தோழர்கள் வெகுண்டு எழுந்தனர்.  அதுசமயம் பெரியார் இப்படி அறிக்கைவிட்டார்.  கதாகாலட்சேபம் பார்ப்பனரின் தனி உரிமை.  இதில் இவர் ஒருவரே பார்ப்பனர் அல்லாதவர்; பிழைத்துப் போகட்டும் அவரைத் தாக்க வேண்டாம் என்றார்.


உடைமைகள் இதுதான்

புத்த துறவிகள் (பிட்சுகள்) கீழ்க்கண்ட உடைமைகளைத்தான் தனிச் சொத்தாக வைத்துக் கொள்ள வேண்டும்.
திருவோடு    1
மூன்று ஆடைகள்    3
ஊசி 1
சவரக்கத்தி 1
பெல்ட் 1
நீர்க்குவளை 1


கிரகணங்கள்

சூரிய சந்திர கிரகணங்கள் ஆபத்துக்குரிய கோர நிகழ்ச்சிகள் என்று பாமர மக்கள் கருதுகின்றனர்.  அது ஒரு சாதாரண இயற்கை நிகழ்ச்சி என்பதை உணராமல், நம் மக்கள் சூரியனையும், சந்திரனையும் காப்பாற்-றுவதற்காக தலைமுழுகுகின்றனர். பட்டினி கிடக்கின்றனர்.  வீண் ஆரவாரம் செய்கின் றனர்.  சூரியனுக்கும் சந்திரனுக்கும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி உண்டு.  அவைகளுக்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.

(நேரு எழுதிய உலக வரலாறு என்னும் நூலிலிருந்து)


கலைவாணரின் கொள்கை

நிருபர்: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் தங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?
கலைவாணர்: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லக்கூடாது. இருந்தாலும் பரவாயில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது சுயமரியாதைக் கட்சிதான்.
நிருபர்: உங்கள் கொள்கை என்ன?

கலைவாணர்: ஆதி முதல் குடிஅரசு, தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் நடத்திய தேசபந்து இரண்டையும் படித்துவந்தேன். பக்தி \ நாத்திகம் பற்றிய வேறுபாடுகளை நன்றாய்த் தெரிந்துகொண்டேன்.

நிருபர்: உங்கள் முடிவு?

கலைவாணர்: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை. அதுவே என் முடிவு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *