‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்! முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி! – தலையங்கம்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியைத் தந்த, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைப் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி வார்த்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் வழிகாட்டும் நெறி என்ற முப்பாலையும் குடித்து வளர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, கட்சி – ஆட்சி என்ற இரட்டைக் குதிரைகளையும் கட்டி – இந்தியாவும் – உலகமும் மெச்சத்தகுந்த கொள்கை ஆட்சி நடத்தி வரலாறு படைத்து வருகிறார் நமது மானமிகு மாண்புமிகு முத்துவேல் […]

மேலும்....

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அய்ந்து ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது அவசரமாகக் கொண்டு வந்தது ஏன்?

இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி, தொடர் போராட்டங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA2019) நடைமுறைக்கு வருவதாக 11.3.2024 மாலை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு, நடைமுறைக்கு வருவதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே கடும் கண்டனங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்து வரும் இந்தச் சட்டத்தைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் திடீரென அமலுக்குக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன […]

மேலும்....

இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது! சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது! தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – […]

மேலும்....

மக்களை நிரந்தர முட்டாளாக்கும் ஜோதிடப் பித்தலாட்டத்தை தொடர விடலாமா?

ஜோதிடம் என்பது புரட்டு; மகாபுரட்டு என்பது அன்றாடம் ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற கூட்டத்தின் பொய்மை மூலம் நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்தாலும்கூட, மீண்டும் தொடர்ந்து மக்கள் சூதாட்டத்தில் எப்படி மீண்டும் மீண்டும் ஏமாந்து இழப்புகளைச் சந்திக்கிறார்களோ, அப்படியே ஜோதிடத்திலும் தொடருவது மனிதனின் பகுத்தறிவுக்கும் தன் மதிப்புக்கும் எதிரானது; கேலியும் வெட்கமும் அடைய வேண்டிய அவமானமும்கூட! வானவியல் (Astronomy) என்பது அறிவியல் ; ஜோதிடம் (Astrology) என்பது போலி அறிவியல். அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் […]

மேலும்....