மனமின்றி அமையாது உலகு (12) அச்சம், பயம், பதற்றம்

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையை அடைவதற்கு முன் அவன் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறான். ஆதிமனிதனாக காடுகளில் அலைந்து திரிந்தபோது, கொடிய உடல் வலிமை மிகுந்த விலங்குகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவனுக்கு எளிமையானதாக இருக்கவில்லை. பிழைத்திருப்பது என்பது அப்போது அவனுக்கு அத்தனை பெரிய சவாலான ஒன்றாக இருந்திருக்கிறது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து தப்பித்து, முப்பது ஆண்டுகள் வாழ்வது என்பதே அப்போது மிகப்பெரிய சாதனை. மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1899ஆம் ஆண்டில் சென்னை வால்டாக்ஸ் சாலையில், ‘ஸ்ரீலட்சுமி விலாச நாடக சாலையில்’’ நாடகம் பார்க்க வருவோருக்கான அறிவிப்பில், ‘‘பஞ்சமர்கட்கு இடமில்லை’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன் இந்த நிலைதான் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (11) மனச்சோர்வு (Depression)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனச்சோர்வு என்றால் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மனச்சோர்வு என்பது மருத்துவ அறிவியலால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட அறிவியலாளர்களிடம் இருந்து இதற்கான ஒரு தெளிவான கருத்தொற்றுமையைக் கேட்டுப் பெற்றிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை யின்படி மனச்சோர்வு: 1. எந்த வித புறக்காரணங்களும் இல்லாமல் அல்லது புறக்காரணங்களின் இயல்பை மீறி ஒரு தொடர்ச்சியான மனக்கவலையை எந்த நேரமும் கொண்டிருப்பது. […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (353) தேவநேயப் பாவாணருக்கு அஞ்சல் தலை வெளியீடு! – கி.வீரமணி

மேனாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் திருமதி. புனிதவதி அவர்கள் 11.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவ்வமயம் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் சென்னை திரும்பியதும், 14.2.2006 அன்று காலை சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் 14.2.2006 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....