பெண்ணால் முடியும்! : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் கார்சேரி. இங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த மாணவி பிரேமலதா, அய்.நா.சபையில் உரையாற்றியிருப்பதன் மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்ல; மனித உரிமைக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அய்.நா. மனித உரிமைக் கல்விக்கான உலகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில், 2002 முதல், 12 ஆண்டுகளுக்கு மனித உரிமைக் கல்வி ஒரு பாடத்திட்டமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அந்தப் பாடத்திட்டம் நடைமுறையில் இருந்த பள்ளிகளில் மதுரை மாவட்டம் இளமனூர் […]
மேலும்....