சுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்!
கடையில் வாங்கப்பட்டதாக ஒரு சுடுமண் வரைபட்கையைக் காட்டி, “மகாபாரதம் 3600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது. எனவே, அது ஆரிய நாகரிகம்“ என்று மோசடியாய் முடிவுகளை வெளியிட்ட நந்திதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களே அவரின் மோசடியை வெளிப்படுத்தின. கேள்வி: மகாபாரத யுத்தம் நடந்ததாகச் சொல்லப்படும் குருட்சேத்திரத்தில் நடந்த அகழாய்வில் மிகப் பழமையான படிநிலையே கி.மு. 1000 என நிர்ணயிக்கப்படுகிறது. ஆக, மகாபாரதம் நடந்ததாகக் வைத்துக்கொண்டாலும் அதன் பழமை 3,000 ஆண்டுகள்தான். […]
மேலும்....