அய்யாவின் அடிச்சுவட்டில் ….இயக்க வரலாறான தன் வரலாறு (266) விஜயவாடாவில் நாத்திகர் மாநாடு!

கி.வீரமணி தஞ்சையில் ரயில் மறியல் நடத்த முயன்றதமிழர் தலைவர் ஆசிரியரைகைது செய்யும் காவல்துறையினர் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான _ உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை மீட்புக்காக தஞ்சாவூரில் 27.12.1995 அன்று எனது தலைமையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக இரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம். எம்.ஜி.ஆர். சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளிடையே உரையாற்றுகையில், “காவிரியில் தண்ணீரின்றி தாளடி சம்பா பயிர் காய்ந்து […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (76) : ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழ் தேசியம்!

நேயன் தமிழ்த் தேசியத்தை தமிழ்ப் பண்பாட்டோடு, தமிழ் மரபுக்கு ஏற்ப, தன்மானத்தோடு, மூடத்தனம் இல்லா பகுத்தறிவு நோக்கில், ஜாதி மதங்களுக்கு இடமின்றி, நாத்திக_ஆத்திக சார்பற்று, தன்னாட்சி உரிமையோடு அமைத்துக் கொள்ள பெரியார் முயன்றார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நாத்திகமோ, மதமொழிப்போ, வகுப்பு எதிர்ப்போ இல்லை. இருக்கிறது என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் அறியாதவராய் இருக்க வேண்டும் அல்லது விஷமப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்க வேண்டும். (ஆதாரம் : தமிழர்_தமிழ்நாடு_தமிழர் பண்பாடு பக். 13) திராவிட இயக்கம் தோன்றாமல் […]

மேலும்....

கவிதை : புதுவைக் குயிலே!

– பொதட்டூர் புவியரசன்     ஏழையப்பர் உயரப்பர் ஒப்பப்பராக கருத்தப்பம் தந்த கவியப்பரே!   காற்றில் ஒலிக்கிறது நீ தந்த தத்துவம்.   புதியதோர் உலகம் செய்வோம் என்றதேன்?   மதமும், மடியும், மலையும், மடுவும் கொண்ட இவ்வுலகை சாய்த்துச் சமன்செய்து புதியதோர் உலகம் செய்யாமல் ஓடப்பரும் உயரப்பரும் ஒப்பப்பராகாரென அறிந்து தானோ?   “இரவில் வாங்கும் இந்திய சுதந்திரம் என்று விடியுமோ? யாரறிகுவரோ?’’   என்று நீ வைத்த வினாக்குறியை, முற்றுப் புள்ளியாய் மாற்றாமல் […]

மேலும்....

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்களா? ஜாதி மறுப்பு திருமணங்கள்தான் சமூகப் பதற்றங்களைத் தணிக்கும் வழி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

கர்நாடகாவைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையில், “சமுதாய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களுக்கு நீதிமன்றங்கள் உதவுகின்றன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் ஜாதி மற்றும் சமூகப் பதற்றங்களைக் குறைக்க முன்னோக்கிச் செல்லும் வழியைக் காட்டுகிறார்கள். படித்த இளைஞர்கள், […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஜாதி ஒழிப்பு சல்லடம் கட்டும் பார்ப்பனர்கள்!

கவிஞர்.கலி பூங்குன்றம் “கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதி உதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 5 கிராம் (22 கேரட்) தங்கம் வழங்கப்படும்’’ என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். குருமூர்த்தியின் ‘துக்ளக்’கும், ஆர்.எஸ்.எஸின் ‘விஜயபாரதமும்’, பார்ப்பனர் சங்கமும் அடேயப்பா… எவ்வளவுக் குதி குதிக்கிறார்கள் _ இடுப்பு வேட்டி அவிழ்ந்து கீழே விழாததுதான் பாக்கி. குடும்பியும் […]

மேலும்....